சனி, 25 செப்டம்பர், 2010

கூத்துக்கு ஒரு கவி

ஆயிரம் ஆயிரம் கதைச்
சொல்லுவார் ஆனந்தம்
இதுவென கண்டுகளித்தோம்
தெருவோர நாயகனாய்
நினைவில் நிற்பார்

தை தோம் தை யென
சங்கீதம் முழங்க
ஆட வந்தவன் நானே
எனை ஆட்டுவிப்பவன்
நீயே....

சலங்கை யோலிதனை
கலங்கமிலாமல்
காற்றுக்கு இசையாக்குவார்
வேறோனே.......

ஓரிரவில் சரித்திரம்
முடிக்கும்
சாம்பவான்கள்
இவராவர்.......

சாதி மதமின்றி
அன்று அனைவரும்
கண்டுகளித்த
கதாநாயகர்கள்
எத்துனையோ.........

பெயரறிவோமா இன்று
பெருந்தவறு செய்துவிட்டோம்
என்று நினைக்கிறேன்

நாகரீகம் வளர்ந்து
நாடக கலையும் வளர்ந்து
இன்றும் கூழுக்காக
கூத்தாடுவோர் வற்றிய
வறுமையில்
கலைமரவாது.........

வந்தேன் வந்தேனே
உனை
வாழவைக்கும் தெய்வம்
நானே...........
தொடரும் இருளில்
தீச்சுடரான வாழ்க்கைகள்....

6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

எனக்கு யாரைச் சொல்லியிருக்கிறீர்கள் எனப் புரியவில்லை தினேஸ்.ஆனால் அருகி வரும் கூத்துக் கவிஞரைப் பற்றி சொல்வதாய் தலையங்கம்.

dineshkumar சொன்னது…

வணக்கம் ஹேமா
அழிந்து வரும் தெருக்கூத்து கலை பற்றியும் கலைஞர்களின் வறுமையையும் கூறமுயன்றேன்
தவறேனும் உள்ளதா சகோதரி

ஹேமா சொன்னது…

தவறில்லை தினேஸ்.யாரையாவது குறிப்பிட்டு இருப்பீர்களோவெனப் பார்த்தேன்.ஏனென்றால் எனக்கு யரையும் தெரியது.எம் பண்பாட்டுக் கலைகள் இதுபோல எத்தனையோ அருகி வருகிறது.நினைவு கொள்வதே பெரும் விஷயம்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

எதார்த்தம் வார்த்தைகளில் கவிதை அருமை / பகிர்வுக்கு நன்றி

வினோ சொன்னது…

இன்னும் எத்தனை வருடங்களோ.. இவைகள் ? நல்ல கவிதை தினேஷ்..

kavitha சொன்னது…

arumaiyana kavithai. ungal kavithaiyai oru muraiku pala murai padithaal thaan enaku porul purigirathu....... antha alavirku sorkal kadinamanatha allathu en puthi mangiyatha theriya villai. but nice

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி