திங்கள், 20 செப்டம்பர், 2010

ஐம்பதாவது பதிவு

நடுத்தர வர்கம் நான்
இன்று உங்களில் ஒருவனானேன்
ஒவ்வொரு சூழ்நிலையிலும்
ஒடுக்கப் பட்டவன் நான்
திறமைகள் பலவிருந்தும்
பலனில்லாமல் போயின

நடுநிசியில் நந்தவனம்
பற்றி யோசிப்பவன்
நானரிந்ததேனோ
நட்சத்திரம் குடைபிடிக்க
நடுவானில் நாநிர்க்க

சுற்றும் இரண்டு
சூழ்நிலை மறந்து
மனமும் மதியும்
மதிக்க தக்கவன்

கள்ளம் கொலா
உள்ளம் அடைந்தேன்
பிற்குழியல்லா
பாதை தேடினேன்

கடக்கும் பாதை
மறவேனானேன்
அடி தொடும்முன்
குழிபெயர்த்தன

பாதங்கள் பலவீனப்பட்டன
அடித்தொடரும் முன்னரே
மனம் தளரவில்லை
கடவுளை பார்த்ததுண்டா
நீவிர்............

நான் பார்த்ததுண்டு
பலவுருவில் - இன்று
உங்கள் உருவில்
கடவுள் என் முன்னே
என் எழுத்துக்கு
கைகொடுக்கும்
தெய்வங்களாக.........

4 கருத்துகள்:

Chitra சொன்னது…

முதல் தரமான கவிதை. குறுகிய காலத்தில், 50 பதிவுகள்..... வாவ்! பாராட்டுக்கள்!

ஹேமா சொன்னது…

தினேஸ்....பதிவு 50 ல் இப்படி தைரியமில்லாத கவிதை வேண்டாம்.என்ன இது.ஏன் ?

வாழ்வில் முயற்சியும் நம்பிக்கையும் இருந்தாலே போதும்.எங்கும் எதிலும் ஓரிடம் நமக்குண்டு.நானும் நடுத்தர வர்க்கம்தான்.ஆனால் சோர்வதில்லை.

ஈழத்தில் எங்களுக்கில்லாத கஸ்டமும் துன்பமும் உங்களுக்கு வந்திருக்கிறதா தினேஸ்.

மனம் கழுவ நிறைய எழுதுங்கள்.மனம் இலேசாகும்.
இன்னும் இன்னும் எழுத
மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே.

dineshkumar சொன்னது…

நன்றி சித்ரா அக்கா

வணக்கம் ஹேமா
கண்டிப்பாக நான் மனம் தளரவில்லைங்க இதுவரை கடந்து வந்த பாதையை விவரித்தேன்
மிக்க நன்றிங்க........
என்னை சிந்திக்கவைத்ததற்க்கு படைப்பில் சிறு மாற்றங்கள் செய்துள்ளேன்

ஹேமா சொன்னது…

நன்றி தோழரே.காற்றலையில் கை கொடுங்கள்.
என்றும் இதே நம்பிக்கை உங்களைச் சிரிக்க வைக்கும்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி