வெள்ளி, 24 செப்டம்பர், 2010

என் மணநாள் காண

மணநாள் காண
மனதிற்கு ஆவல்
காதலுண்டு மனதில்
காதலிக்கவில்லை

தனிமையில் இன்றுவரை
கழித்துவிட்டேன்
தனிமரமாக
இனி மடலொன்று
வரைவோம் அம்மாவுக்கு

விரைவில் பெண்பார்க்க
நானாக கேட்டால்
தவறாக என்னுவரோ
தந்தை யவர்கள்
வேண்டாம் வேண்டாம்...

காலம் வரும்
கனவில் வருபவள்
கைபிடிக்க வருவாள்
அவள் வருகைக்காக
தனிமையில் இன்றும்....

3 கருத்துகள்:

வினோ சொன்னது…

காலம் கை கூடும் விரைவில்..

ஹேமா சொன்னது…

உங்கள் கவிதை படிக்க இங்கே எம்மவர்களின் நிலை ஞாபகம் வருகிறது.வீட்டுக்காக,சகோதரிகளுக்காக உழைத்த எம் இளைஞர்கள் இப்போ தலையில் முடியில்லாமல்.ஏனென்றால் எனக்கும் கல்யாணம் பண்ணித் தாருங்கள் என்று கேட்கும் தைரியமில்லாமலே மரியாதைக்காக வாழ்ந்துவிட்டு வயதையும் தவற விட்டு இன்று தனிமையில்.

எனவே சாடைமாடையாகவாவது சொல்லத்தான் வேண்டும் பெற்றவர்களிடம்.
தவறவிட்டால் தலை மொட்டை.கஸ்டம் தினேஸ் !

Chitra சொன்னது…

உங்கள் கவிதை ஒரு புறம் தாக்கத்தை உண்டு பண்ண, தோழி ஹேமாவின் பின்னூட்டம், இன்னும் வலிக்க செய்கிறது. குடும்ப நலனுக்காக வாழும் தியாக உள்ளங்கள்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி