வியாழன், 2 பிப்ரவரி, 2017

1. மாய மனதில் துளிர்த்தவை ...!

1. குதிரை ஏறியே குற்றம் 
குரவை ஆடிடும் மேடை 
சதியை ஆற்றிய ஒற்றன் 
சரணம் பாடிடும் மேடை 
உதிரம் ஓடிட மொத்தம் 
உணர்வைத் தூண்டிடும் மேடை
கதியைத் தேடியே சுற்றும்
கவனம் ஆண்டவன் மேடை....

2.உற்றவை ஏற்றுச் செல்ல 
உருத்துதாம் ஊராய்க் கொள்ளார்க்கு 
அற்றவை நேற்றில் கொண்டு 
அளந்திடும் கூற்றில் சோறாக்கும் 
கற்றவர் பூண்டக் கார்யம் 
கவர்ந்திடக் கோர்க்கும் போர்வைக்குள்
பற்றவை தோற்றம் தீயாய்
பறந்தது போற்றும் கோணத்தால்



3.கயிலை நாதனே காளை வீரனே 
கானல் போக்கியக் காலச் சூரனே 
மயிலை வீற்றிர நாளும் தேடினோம் 
மாலைச் சூடிட மாற்றம் வேண்டினோம் 
பயிலும் மாணவர் பாலர்த் தானவர் 
பாலம் போடவே பாதை நாடினோம்
ஒயிலாய் நின்றொரு காட்சித் தந்திட
ஒன்றாய்க் கூடிய தேரில் சாட்சியாய் ..

4.நிரந்தரமே தலைமுறைக்குத் தீர்வு 
நிழலெனவா நடைமுறைக்குச் சோறு 
அறிந்திடடா அவலநிலை ஆட்சி 
அமைந்ததுவே அகிலமெல்லாம் சாட்சி 
புரிதலில்லா அமைச்சரவைக் கூட்டம் 
புதுயுகமாய்ப் பிறக்கவிடா ஆட்டம்
நரியெனவே நடந்துகொள்ளும் காட்சி
நடந்தவையோ நடிகனெனும் சூழ்ச்சி

5.ஆதிசிவன் காளையுடன் வந்துவிட்டான் தமிழனென்றே...! 
அம்மையப்பன் ஆகநம்மை ஆளுகின்றான் தமிழனென்றே...! 
சாதிகளை விட்டெழுந்த வேள்வியிலே தமிழனென்றே...!
சாதகமாய் மாமருந்தைச் சாரமிட்டான் தமிழனென்றே...!
நீதிமுறைத் தாண்டவத்தில் மீளுகின்றான் தமிழனென்றே...!
நீண்டவொரு போர்படையை மீட்டுவிட்டான் தமிழனென்றே...!
பாதியிடம் பார்வதிக்கே பங்களித்தான் தமிழனென்றே...!
பாதையினைச் சீர்படுத்த சீடனுருத் தமிழனென்றே...!

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிக்கிறது...

தொடர வேண்டும்... நன்றி...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி