வியாழன், 14 ஜூலை, 2016

சர்வம் சிவமயமாய்...!


தர்மம் தனதுடைமைத் தங்கத் தடைத்தகரேன்
தன்னில் தனியனாகும் தங்கச் சுடரெனவே 
மர்மம் உடைத்தெரிய எங்கும் வளம்வருவ 
மண்ணில் மனிதனாக ஏங்கும் மலர்களுமே 
கர்மம் தொடர்ந்துவரும் கக்கும் கனலையும்தான் 
கண்ணின் இமையதுபோல் காக்கும் அரண்களிடு
சர்வம் சிவமயமாய் சக்தி உடன்பிறக்கும்
தன்னில் நிகழ்வுடுத்த சக்தித் தனிலுயிர்ப்பாய்
ஆலயம் முழுதும் வலுப்பெற வேண்டும்
ஆண்டவன் என்றேக் கடனுற வேண்டும்
பாலகன் எனுவான் பலம்பெற வேண்டும்
பாண்டவன் என்றோர் பயமர வேண்டும்
நாளதில் நிகழ்வும் நடைபெற வேண்டும்
நானென அன்றே வளம்வர வேண்ட
மாளென மறந்தே மருந்திட வேண்டும்
மாயனும் அருந்த மறுமலர் ஆவான்

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை நண்பரே வாழ்த்துகள்

பரிவை சே.குமார் சொன்னது…

அருமை தினேஷ்...
நான் முன்னாடியே சொல்லியிருக்கேன்... விளக்கமும் போட்டுருய்யான்னு.. மூணு முறை முதல் பத்தி படிச்சித்தான் கொஞ்சம் புரிஞ்சிக்க முடியுது... நானெல்லாம் தமிழ் புலவனில்லை... சாதாரண ஆளுய்யா...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி