சனி, 12 மார்ச், 2016

இன்று போய் ...! அன்றில் வா ...!

மக்களைக் குழப்பும் மந்தை
               மத்தியும் மழுப்பும் சந்தை
பக்கமுள் சலவைச் செய்துப்
               பட்டென உடுத்தும் ஆடை
சிக்கலைத் திரித்துப் பார்க்கச்
               சிந்தையுள் நழுவும் மீனே
சுக்கிலைப் பிணியைத் தீர்க்க
                சொக்கிடப் பலதும் போச்சு....


உச்சி யென்றான் வெற்றித் தோல்வி
                உள்ளம் கொன்றுப் பற்றிக் கொண்டான்
பிச்சை யென்றான் பேழை யேந்திப்
                பித்தன் நின்றான் நேருங் கோணம்
இச்சைக் கொண்டே இம்சைக் கண்டு
                இன்றி யாதும் இல்லை வென்றான்
நிச்ச யித்துக் கோரும் கோலம்
                நிர்ண யித்தேக் கோட்டை வே(ய்)ந்தான்

2 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
மிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு...
வாழ்த்துக்கள் தினேஷ்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி