சனி, 12 மார்ச், 2016

கடவுளைக் கண்டேன் கட உள்ளே என்றார்

இந்தப் பக்கம் நானும் வருவதே இல்லை
அந்தப் பக்கம் போவேன் அதுமொரு எல்லை
சொந்தப் பக்கம் போனால் எனிலெழும் மின்னல்
வந்தப் பக்கம் போக வழிவிடு என்றேன்

அண்ணன் பரிவை சே.குமார் அவர்களின் அழைப்பிற்க்கு இடமளித்து 

கந்தனைக் கூப்பிக் கருணை உள்ளத்தே  
வந்துனைக் காணா திரும்பி வெள்ளத்தே
நிந்தனைக் கொள்ளா அருளும் எண்ணத்தே 
சிந்தனைச் சூடிச் சிவனை சந்தித்தேன்

கடவுளைக் காணக் கடுந்தவம் வேண்டும்
கடவுளைக் காணக் கட உள்ளே என்றார்
கடவுளைக் காண நடந்தது என்ன
கடவுளென் மாயன் கடத்தினான் என்னை 

சரி சரி இதோ வந்துட்டேன் இருங்க 

கடவுள் : என்னடா வேண்டும் உனக்கு தினம் இப்படி புலம்பித் தள்ளுற நான் என்னடா செய்யனும் சொல்லு

என்ன எனக்கு வேண்டும் என்றே
எனக்கு எட்ட வில்லை என்றும்
உண்ண உணவும் தந்தாய் தூணில்
உடுத்த உடையும் தந்தாய் பாக்யம்
சின்ன உதவி என்றேத் தேடிச் 
செல்லப் புரலும் சிந்தை அங்கே 
எண்ணக் கதவு டைத்து சொல்லில்
ஏற்பக் கோர்ப்பேன் ஏதும் வேண்டா

கடவுள் : அடப் போடா மாதவா என் கூடவே இருக்கனும்னு சொல்ற என்னையே பாடிப் பார்த்துட்டு இருக்கனும்னு சொல்ற இது போதுமா 
உனக்கு

எனக்கிதுப் போதும் எனைச்சுற்றி
எதற்கிது வேண்டும் தலைச்சுற்ற
மனமொரு நோயாய் மனிதத்தை
மயக்குது பேயாய் வினைத்தொற்ற
கணக்கெது தேடேன் கடனைத்தீர்
கலந்திட வேண்டாம் கடமைத்தேர்
நினைப்பது நானோ நிலைக்கொள்ளேன்
நிகழ்வதுக் காண மனதெல்லாம் 

கடவுள் : ஆகா ஆகா வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு கேட்கிறானே நான் என்ன சொல்ல ... ஆசையை அறுத்தெரிய சொல்லுறான் அவன் கடன்பட்ட கணக்கைக் தீர் என்கிறானே இங்கு நின்றால் நம்மையும் குழப்பிடுவான் நாம ஓடுறதே நல்லது ....

கலியுகம் : இப்படியாக அன்று தொடர்ந்த கடவுளைக் கண்டேன் தொடர்பதிவு பாதியிலே நிற்க அவரும் வந்தப் பாடில்லை நானும் வந்தப் பாடில்லை வலைப்பூ தூங்கி வழிய தட்டி எழுப்பி போனது போகட்டும் போட்டு விடுயென்றேன் இடுக்கை இட்டேன் 

2 கருத்துகள்:

பரிவை சே.குமார் சொன்னது…

நல்லாத்தான் இருக்கு... ஆனா முழுப்பதிவும் எழுதியிருக்கலாமே...

பரவாயில்லை சொல்லி நாலு மாதம் ஆனாலும் மறக்காமல் எழுதியதற்கு நன்றி.

KILLERGEE Devakottai சொன்னது…

ஆஹா கவிதை வடிவில் அருமை நண்பரே வாழ்த்துகள்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி