செவ்வாய், 15 மார்ச், 2016

சதியிலே தமிழகம் சுழலுதய்யா...?

சுரண்டிப் பிழைக்குது அரசாங்கம்
கரண்டித் துடிக்குது அடுப்பங்கரையில்
மருந்தைத் திறக்கிறான் விவசாயி
மதிகெட்டு ஓடுறான் பின்னாலே
மலர்களைத் தூவுறான் முன்னாலே
மரணத்தின் ஓலம் மறையும் முன்னே
மழைவரும் தருணமும் அறிந்ததுண்டா
மறைவுகள் பொதுவில் நடப்பதிங்கே

குடிகெட்டுப் போனான் பொருப்பாளி
குடித்திட்டுப் போனான் உழைப்பாளி
குடிசைக்குள் ஏற்ற விளக்கில்லே
கும்பிடுப் போடுறான் மதுவாலே
பிச்சை ஏந்துறான் எதுக்காக
இச்சை ஊறுகாய் அதுக்காக
சொச்சம் தீர்த்தும் பலனில்லை
பச்சை குழந்தைக்கு பாலில்லை
அச்சம் என்னைப் பற்றியது
அதிகாரம் அவலம் தொற்றியது
சதிகாரன் கணக்கு முற்றுமது
சதியிலே தமிழகம் சுழலுதய்யா

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி