கோளப் பெருஞ்சுவரை ஆளப் பிறவும்
அத்துனை ஆத்மா எத்துணை கொள்ளட்டும்
கேளாதிருக்க கருவனமாம்
காத்திர கனவும்
கடுந்தன யேற்றம் கற்றதனை கொள்ளட்டும்
கோளம் உருவான காலமென
நிலவும்
நிழலாட்டம் களவின் பிறப்பும் கொள்ளட்டும்
சோளம் பொறி(ரி)யிடுக்கில்
சிக்கி தவிக்க
கானல் பணியெந்தன் கடமையாய் கொள்வேன்
வேதமறிய கற்றவன்
செயல்பாடு கற்சிலை
சிகைக்கோதி நர்த்தனம் ஆடுதவன் கோணகூட்டம்
பேதமென்பான் போதனை
மறவான் குணவன்
போதைகொள்ள
பேதையின் ஆடலிலே பெருங்கூட்டம்
சேதமெதோ சங்கடத்தை
தாங்கும் பொற்சிலை
பெண்ணவள் போர்த்திய வலையை அறுங்கூட்டம்
சாதகமாய் சேர்ந்தவனே
கோர்த்தவன் தற்செயல்
அறியாது அவன்பாட அருகருகே பொய்கூட்டம்
தந்துணை யாரெனுவாய்
தாமெனும் தாரக
மந்திர மாயையாய் பொழியும் பொய்யிணையே
சிந்தனை ஆளுகையில்
தாகமதிர் படுகை
தீர்க்கநிலை மழையாய் பொழியும் மெய்யிணையே
சுந்தரம் காணுகையே
தந்திர வடுவாய்
சிந்தையில் உண்ணச் சோறிடும் பொய்யிணையே
எந்துணை யாகுமென்
பொய்யனின் மெய்யே
கந்தனை போற்றிவரும் தெய்வ செய்கையிணையே
3 கருத்துகள்:
பொய்யாய் சொல்லிய மெய் உண்மையே....
மிக நல்ல செய்யுள்
மரபில் எழுதுவது மகத்துவமானது ...
தொடர்க
ரசித்தேன்...
கருத்துரையிடுக