வெறுமனே வாழ்வை
கடந்துவிட சித்தம்
சந்தையில் சிதறிவிடா
எண்ணம் கொள்ளுதே
மொத்தம் சங்கட
சிக்கலில்
சித்திரம் பழகியும்
சத்திரம் கொள்வதில்லை
கடுகு வெட்டுபட
காரம் குறையுமா
காரண சூரணம்
கையமர்ந்தே
கங்கை முடிசூடி
கந்தன் அப்பனாகி
நின்றெலாம் ஆள்வ
நிலை கொள்ள
நிசம் சந்தர்ப்பம்
வசமே
நின்றாலும் நீடு
சென்றாலும் ஏடு
வென்றாலும் பாடு
இருந்தெவரும்
கண்டதில்லை
அன்றில் ஒன்றும்
அறிந்தும் அடையாது
புரிந்தும் படியாது
பாலம் தடைபட்ட
பாட்டன் கதையேது
வாட்டி நிலவுதே
இன்றும்
கொடுப்பினை
கொண்டவர்க்கே கோளம்
எனதாக கண்டவரும்
அண்டி நிற்க
அர்ப்பமே சித்தமா
அப்பனே
அன்னார்க்கும் நிலை
நின்னார்க்கும் விலை
இன்னார் விரித்த
வலையில் சிக்கிய
மீனெங்கு மீண்டும்
நீந்த நீரற்று .....
5 கருத்துகள்:
நல்லதொரு கவி நண்பா,,,
வலைச்சர வேலையில் மூழ்கி விட்டேன் வருகை தரவும்
http://blogintamil.blogspot.ae/2014/12/blog-post_12.html
வெறுமனே கடந்து போக முடியாத அர்த்த வரிகள் !
இன்றைய எனது மனநிலையை இந்தக் கவிதை அப்படியே வாசித்துச் செல்கிறது....
அருமை தம்பி.
கடுகு வெட்டுபட
காரம் குறையுமா
வெறுமை போக்கும் கவிதை..
வணக்கம்
கருத்தோட்டம் நிறைந்தகவிதை அருமையாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துரையிடுக