காற்றாய் கனலாய் நினைவில்
ஊசலாடி நித்தம் என்னைச் சுற்ற
கர்ப்ப கிரகமா நான் ? அலைகள்
ஓயாது புரண்டு புரண்டு மேலெழ
சொல்ல நினைப்பதும் ஏதோ தடுப்பதும்
மெல்ல வழியைத் துழாவும் செல்லென
சொல்லா செவிபடிய தாழா உழவும்
மனமது கோட்டையே உள்ளது
செய்வத றியாது பிதற்றும் சித்தம்
மெய் தவரும் மொத்தம் மூழ்கிய
பொய் யென மெய்யாய் பொழியும்
புரட்சித் தலையாடும் கோர்வை
தேடிப் போவதென் போக்கு எனினாலும்
கூடிப் பிழைக்க குடியவனை நாடி
வருவாளே நாணமுடன் உன்னவள் தேடல்
நிலைக்க உளத்தையேச் சூடு
கர்ப்பகிரகம் தானடா நீயும் உள்ளவனை
அமர்த்தியா ளுங்கொடை கொண்டான் யுவன்
அத்தகைய சுத்தச் சுகந்தம் அடையும்
பேராணந்த பேருவ மெய்யருள் பொய்யே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக