வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

நடமாடும் பிணம் நாமடா .....! மீண்டுவரும் வதம் ....!



நாடோடி வாழ்க்கை தானடா..!
நடமாடும் பிணம் நாமடா..!
நயவஞ்சகம் நம்மில் ஏனடா..?
நடைபாதை வஞ்சம் தீர்த்தால்
நமக்கு பாதை ஏதடா..?

பனைபோல வளர்ந்திருக்கும்
பாதை மறிக்கும் பேராசை ஏனடா..?
பணம் பறித்து பழிசுமந்து
பகையாலும் உள்ளம் கொண்டு
பாசமில்லா வேஷம் ஏனடா..?

மலர் கூட சிரிக்குதடா..!
மதிகெட்டு மானம் விற்று
மாயையான வாழ்வை விட்டு
மரணித்து கிடக்கையிலே
மலர் கைகொட்டி சிரிக்குதடா..!

தனையாலும் எண்ணம் நம்மில்
தரங்கெட்டு தடுமாறி போகுதடா..!
தடை விதித்தால் நலமுண்டு
தகரம் கூட தங்கம் தானடா..!
தட்டி தரம் பிரித்தால் - நம்மில்
தங்க குணம் ஏதடா..?

குரல் கொடுத்தும் திருந்தவில்லை
குணம் மாற குறையுமில்லை
குறிபார்த்து நோட்டமிட்டு
குழி பறிக்கும் வேலை ஏனடா..?
குள்ள நரி நம்மில் தோற்குமோ..?

கள்ளனுக்கும் மனமுண்டு
கரைதெரிந்தால் குணம்பெறுவான்
கண்ணீரும் வருவதில்லை
கரை ஏனோ தெரிவதில்லை
காட்டாற்று வெள்ளம்போல - பலர்
கண்ணீரில் உயிர் வாழும்
கலங்கமுற்ற வாழ்க்கை ஏனடா..?

கலியுகம் : தனிபட்ட நபர்களை பற்றிய வரிகள் அல்ல நம்முடைய அரசியல் சாக்கடை வாசிகளை பற்றியது பதிவு பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவு கொடுங்கள் நண்பர்களே ... கலியுக வதம் தொடரட்டும்

4 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கலியுக வதம் தொடரட்டும்.........

Chitra சொன்னது…

தொடருங்கள்!

உணவு உலகம் சொன்னது…

சுயம் அறிதல். சூப்பர்.

Aathira mullai சொன்னது…

பண மோகத்தால் மனம் கெட்டுத் திரியும் மக்களின் மனத்தை வதைக்கும் இவ்வரிகள். கோபம் ஒவ்வொரு எழுத்திலும் கொப்பளிக்கிறது.. அருமை...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி