வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அந்தரத்தோணியில்.....!


காணா கருவிழியானோ தானே நகலுருவோனோ
சாரம் சலங்கையின் சகனெனும் நகமரியோனே
தாகத் தரணியில் வேகத் தடையெனும்
நாத நடனுருவே சரணம்..

சுயமெனுமுகமெரி சுகமெனுமுகமறி
பிறவணி சூடும் மகத்துவ மாலை
சரீரக் கூடு சமைத்துடன் கோரு
சகதிகளற்ற சாதகமாகு..

சங்கதிக்கேளேன் சரீரமானேன்
சகலமும் இழக்க சடலமுமானேன்
அகிலமும் விரட்ட அந்தரத்தோணியில்
நர்தனமாடிய நான் யார் .....?

2 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான படைப்பு
தேர்ந்தெடுத்துக் கோர்த்த
மணிமணியான வார்த்தைகள்
மன உணர்வை மிகச் சரியாக
படிப்பவருக்கும் கடத்தும் சொல்லாட்சி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ஆர்வா சொன்னது…

அழகான கவிதை..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி