ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

யாரறிவார் ...?


கண்ணே என் கண்மணியே
மழலைப் பேசும் பைங்கிளியே
என்று வருவாய் உந்தன்
தாய் தந்தையின் முகம்காண
இப்பூவுலகில் உந்தன் வரவுக்காக
நாமிருவராக உள்ளோம்
என்று மூவராவோம் சொல்வாயோ
எந்தன் பச்சிளம் கண்றே

ஊரார் பேசக் கண்டேன்
ஆணாக பிறப்பாயோ
பெண்ணாக பிறப்பாயோ - என
யாரறிவார் அவர் தம் பிறப்பை
தாய்மையின் கருவறையில்
உதிக்கும் ஒவ்வொரு
மழலையும் பெண்ணாகவே
முதல் உரு எடுக்குமென்று
யாரறிவார் ஆணும் பெண்தான்
நமை ஆள்பவனும் பெண்தான்....

11 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

யாரறிவார்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யாரறிவாரோ?

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//தாய்மையின் கருவறையில்
உதிக்கும் ஒவ்வொரு
மழலையும் பெண்ணாகவே
முதல் உரு எடுக்குமென்று
யாரறிவார் //

அருமையான கவிதை.

rajamelaiyur சொன்னது…

Super kavithai

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

Unknown சொன்னது…

வருவது எதுவென
அறியோம் நாம்
உருவது ஆனபின்
உணர்வோம் நாம்
கருவது ஆயின்
களிப்போம் நாம்
தரும்வரை அதற்கு
தவிப்போம் நாம்
புலவர் சா இராமாநுசம்
வலைவந்து வாழ்த்தினீர்
நன்றி!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அன்றிலொடியும் நிழலே நின்றிலா
மனமே நிகழு நிலவினில் நீந்தும்
நினைவினி லாளும் சித்திரமே//

அழகான வரிகள்.

அறிவது யாரோ???

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான உங்கள் கவிதை வரிகளுக்கு வாழ்த்துச் சொல்லி
ஓட்டும் போட்டாச்சு சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .......

அம்பாளடியாள் சொன்னது…

தமிழ்மணமும் 6 வது

பெயரில்லா சொன்னது…

''....நாமிருவராக உள்ளோம்
என்று மூவராவோம் சொல்வாயோ
எந்தன் பச்சிளம் கண்றே...''
பெற்றவர் கனவு! நல்ல கனவு..பாராட்டுகள்..
வேதா. இலங்காதிலகம்

சீனுவாசன்.கு சொன்னது…

நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி