திங்கள், 8 ஆகஸ்ட், 2011

பெண்ணவள்....!


பெண்ணவள் பேறுபெற்றவள்
கண்ணவள் காணும் உலகினில்
பெற்றவர் கரம்தனில் முத்துச்
சிலையால் பவழ விழியால்
தாய்மடி புரண்டு தாய்ப்பால்
அருந்தி தவழும் வயதினிலே
மெல்லச் சிரிப்பால் அழகணியாள்

சொல்லத் தொடுப்பாள் சித்திரம்
போலே எண்ணி நடப்பாள்
பள்ளிச் செல்லும் காலமிதோ
அன்னியர் கண்டு வியப்பால்
காலமேந்தி கட்டுழலும் சூழ்ச்சி
பட்டுவண்ணம் பட்டெழும்
சுற்றமறியா புன்னகைப் பூ

சூழல் அறிவாள் எத்துணை
எமைக்காக்க அத்துணை
கரம் நழுவ கண்ணாளன்
கரம் தழுவ இத்துணை
நீளும் எங்கும் சுற்றும்
புதியவர் கற்றும் அறிந்திலார்
அன்பும் பண்பும் அவைகாக்க

சூழ்நிலை மாற சூழ்ட்சிகளோ
ஆள பெற்றுயிர் ஏந்தும்
காட்சிகள் மாற மாசிலா
மரிகொழுந்தாய் மகவை காண
படியேறி பட்டதெல்லாம்
பரண் மேலே பொட்டலமாய்

போர்களம் மறைய பொற்காலம்
துவங்க அன்னையாகிறாள்
மழலையின் மொழிகேட்டு ......

7 கருத்துகள்:

Chitra சொன்னது…

அருமையாக வந்து இருக்கிறது. :-)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஏதோ கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கவிதை நல்லாருக்கு தினேஷ்!

Madhavan Srinivasagopalan சொன்னது…

Very good.

அருண் பிரசாத் சொன்னது…

பங்கு இப்படியே எழுதிட்டு இருந்தா நானும் கவிதை எழுத ஆரம்பிச்சிடுவேன் சொல்லிட்டேன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

பெண்ணவள்...
அருமையான கவிதை...

Madhavan Srinivasagopalan சொன்னது…

Very good again..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி