எங்கும் நிலவுவதில்லை,- நீ
ஏன் இங்கு உலவுவதுமில்லை..?
காலத்தின் வேகத்தில்
உன்னை மறந்தாயோ..?
கலங்கும் கண்ணினுள்
கருவிழியும் தேடிட...!
எங்கு போனாயோ..?
என்ன ஆனாயோ...?
உண்மை அறிந்தாயோ...?!
உன்னை தேடும் பாதையில்
பாதகங்கள் ஏராளமாய்...
விருட்சமாகி உள்ளன.
யார் வளர்த்ததோ..? நிழலில்லாத
விருட்சமாய் விண்ணையும்
தொடும் போல வியக்கிறேன்..!!
பாதைகள் மாறியே பலதூரம்
பயணித்தும் உன்னையறியாமல்...
என்னை மறந்து மரணிக்கிறேன்..
நெடுந்தூர பயணத்தின் முடிவில்...!
அமைதியில்லா விடியலில்
அடங்கிப்போன சரிரத்தில்
அமைதியாக பிரியும்
உயிர் மட்டுமே அறியும் போல...!
அமைதியின் விடியலை.
8 கருத்துகள்:
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
//உன்னை தேடும் பாதையில்
பாதகங்கள் ஏராளமாய்...
விருட்சமாகி உள்ளன.
யார் வளர்த்ததோ..? நிழலில்லாத
விருட்சமாய் விண்ணையும்
தொடும் போல வியக்கிறேன்..!!
பாதைகள் மாறியே பலதூரம்
பயணித்தும் உன்னையறியாமல்...//
அருமையான வரிகள்...
அருமையான கவிதை,
அசத்தலான வரிகள்..
நன்றி..
அருமையான கவிதை,
அசத்தலான வரிகள்.
அழகான வார்த்தைகள் கவிதை நன்றாக இருக்கிறது!
தேடுதல் ஏக்கமாய் விரிந்து நிற்கிறது வார்த்தைகளில்.எதைக்குறித்து என்று மறைத்து வைத்து எல்லோருக்கும் பொருந்தும்படியாக இருக்கிறது கவிதை !
//உன்னை தேடும் பாதையில்
பாதகங்கள் ஏராளமாய்...
விருட்சமாகி உள்ளன.
யார் வளர்த்ததோ..? நிழலில்லாத
விருட்சமாய் விண்ணையும்
தொடும் போல வியக்கிறேன்..!!
//
நல்ல கற்பனை..
வாழ்த்துக்கள்.
//என்னை மறந்து மரணிக்கிறேன்..
நெடுந்தூர பயணத்தின் முடிவில்...!//
azhamana varigal......arumai....
கருத்துரையிடுக