சனி, 11 ஜூன், 2011

மனம் மலரிலடங்கி மாயாதோ...!


பாதை வழிகளின் கூடே வலிகளின்
சங்கமம் இடைவிடா தாக்கம் ஏக்கமாய்
இருளியதோ என்னில் ஏனோ மாற்றம்
இருப்பிலடங்கா நெருப்பாய் தகிப்பு

அனுதினமும் அலைகடலில் ஆழ்ந்து
மடிகின்ற ஆயிரம் கனவுகள் எங்கோ
நினைவுகள் படை சூழ போர்களம்
காணும் புரியா புதிராய்

மனம் மலரிலடங்கி மாயாதோ
மண் சுமக்க மடியேந்தும் சுயம்
கண்டிராத ரணம் கோர்வையாகி - உடல்
சுற்றும் போர்வையானதேன்

நன்னின் யாதோ அகமலர்ச் சூடின்
சுகமலர் பிரிந்தே இணைவை நாடி
மாயை மிரட்டும் காரண விருட்சம்
கரை சேர்க்குமோ என்னில் ....!

21 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

கோனார் நோட்ஸ் பிளீஸ்....

Rathnavel சொன்னது…

வாழ்த்துக்கள் உங்கள் வீட்டு வாண்டுக்கு.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

இலக்கணம் மீறாத
தலைக்கணம் ஏறாத
கற்பக கவிதை நண்பரே
அசத்துங்க

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

அசத்தல் கவிதை..

சி.கருணாகரசு சொன்னது…

சித்தர் பாடல் போல இருக்குங்க.... கொஞ்சம் எனக்கும் புரிவதுபோல எளிமையாக்குங்களேன்....

சி.கருணாகரசு சொன்னது…

கடின நடையாக உள்ளது .... தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.... ஒரு வேளை என்னறிவுக்கு கூட எட்டாமல் இருக்கலாம்..... நன்றி.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எனக்கும் புரியல கவிஞரே

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Super kavithai

தோழி பிரஷா( Tholi Pirasha) சொன்னது…

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

உங்கள் மனதின் மயக்கமோ கவிதை.வார்த்தைக் கோர்வைகள் அருமை !

FOOD சொன்னது…

//மனம் மலரிலடங்கி மாயாதோ
மண் சுமக்க மடியேந்தும் சுயம்
கண்டிராத ரணம் கோர்வையாகி - உடல்
சுற்றும் போர்வையானதேன்//
நான் ரசித்த வரிகள்.

கலாநேசன் சொன்னது…

வித்தியாசமான நடை. வாழ்த்துக்கள்.

தம்பி கூர்மதியன் சொன்னது…

இந்த ஆளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதிலிருந்தே ஒரு மாதிரியா தான் இருந்தாரு.. இப்ப கல்யாணம் வேற ஆயிடுச்சா ஒரு மாதிரி தான் போய்கிட்டு இருக்காரு.. நம்ம சிபி கிட்ட எப்படி ஜாலியான கவிதை போடுறதுனு கேட்டு தெரிஞ்சுகிடுங்க..

இளம் தூயவன் சொன்னது…

நல்ல கவிதை.

G.M Balasubramaniam சொன்னது…

இதற்கு வந்துள்ள பின்னூட்டங்களைப் படிக்கும்போது, புரியாது விழிப்பவன் நான் மட்டுமல்ல என்பது தெரிகிறது. முன்பொரு முறை உங்கள் பதிவுகளை படித்து , கவிதை எழுதும் போது பதவுரையும் பொழிப்புரையும் போட வேண்டும் என்று எழுதியதாக நினைவு. எழுதுபவன் சொல்ல வருவது வாசிப்பவனிடம் சென்றடைய வேண்டும் என்பது என் தாழ்மையான எண்ணம். வாழ்த்துக்கள்.

Softy சொன்னது…

மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


http://www.verysadhu.blogspot.com/

மாலதி சொன்னது…

//மனம் மலரிலடங்கி மாயாதோ
மண் சுமக்க மடியேந்தும் சுயம்
கண்டிராத ரணம் கோர்வையாகி - உடல்
சுற்றும் போர்வையானதேன் //நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

சே.குமார் சொன்னது…

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

சத்ரியன் சொன்னது…

//”வழிகளினூடே
வலிகளின் சங்கமம்
இடைவிடா தாக்கம்
ஏக்கமாய் இருளியதோ

என்னில் ஏனோ மாற்றம்
இருப்பிலடங்கா நெருப்பாய் தகிப்பு”//

சுனாமியின் சுவடுகள் இன்னும் கவிதைகளைக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கும்.

//மலரிலடங்கி மாயாதோ மனம் //

எல்லோரதுமான ஏக்கம் இதுவே.

RAMVI சொன்னது…

வணக்கம் தினேஷ் சார். என் பதிவிற்கு வந்து,comment செய்தது பற்றி ரொம்ப சந்தோஷம். நான் பதிவுகளுக்கு புதியவள் ஆனதால்,இன்று தான் உங்கள் பதிவை பார்கிறேன். கவிதைகள் மிகவும் அருமை.

Meena சொன்னது…

சிறப்பான கவிதை

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி