சனி, 11 ஜூன், 2011

கனவுகள் கூடி......


அந்திமத் தென்றலோடு
ஆத்தங்கரை அமைதியில்
உடனுடை குடியேறி
என்னுள் கலந்தவளே
நின் அழகை ரசிக்க
நாணத்தால் மேகத்துள்
மறைவதென்ன வெண்ணிலவே......

நடைபோடும் மனமே நாணக்
கோலமிடும் பாதவிரலே
பனித்தூவும் இரவில் உடன்
விழித்திருக்கும் நிலவே
அன்ன விழி பேசும்
வியப்பில் விடியல் காண
மறுக்குதம்மா கனவுகள் கூடி.......

5 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடடா நீ நடத்துய்யா........

r.v.saravanan சொன்னது…

கவிதை நன்று வாழ்த்துக்கள்

உங்கள் தளத்தில் என் தளத்தை சேர்த்ததற்கு நன்றி

A.R.ராஜகோபாலன் சொன்னது…

கனவுகள் கூடி
குவிந்து
மனம் நாடி
மகிழ்ந்து
போனேன் போங்கள்

நிரூபன் சொன்னது…

கனவுகள் கூடி, இரவுப் பொழுதென்னும் இயற்கை மீதான உங்களின் காதலுக்குச் சான்று பகரும் ஓர் கவிதையா இங்கே பிறந்திருக்கிறது.

Priya சொன்னது…

கனவுகள் கூடி அழகான கவிதையாகிவிட்டது!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி