செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

மலர் தேடும் நார் ...!


எதிர்பாரா அணைப்பில் நெகிழ
நெருப்பில்லாக் கனலில் தகிக்க
எனைத் தூண்டும் இணையே மனம்
வென்று கரம் பிடிப்பேன்

நிந்தன் நிழல் தொட மலரும்
நினைக்கையிலே படரும் கோலக்
கொடிமுல்லையே பிரியா பிறவிதனில்
மறைவிதித்த புதுப்பிறவியாய்

துறவு பூண்ட துணிவு என்னில்
நிதம் கலக்குதடி உணர்வின் உறவாய்
நீந்துகிறேன் தழலாய் தூண்டுகிறேன்
மாண்டுயிர்த்த மலர்ச் சரமாய்......

25 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

//எதிர்பாரா அணைப்பில் நெகிழ
நெருப்பில்லாக் கனலில் தகிக்க
எனைத் தூண்டும் இணையே மனம்
வென்று கரம் பிடிப்பேன்//

அருமை.. வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் யார்யா அது...... கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் இருக்கே?

எஸ்.கே சொன்னது…

superb மலர் தேடும் நார்! நாருக்கு மலர் சீக்கிரம் கிடைக்கட்டும்!:-)

தூயவனின் அடிமை சொன்னது…

இது சரிவராது விடுமுறைக்கு ஏற்பாடு பண்ண வேண்டியது தான் .

வினோ சொன்னது…

சரி சரி எல்லாம் ரெடியா...

Philosophy Prabhakaran சொன்னது…

என்னமோ நடக்குது... நடத்துங்க...

வைகை சொன்னது…

எதிர்பாரா அணைப்பில் நெகிழ
நெருப்பில்லாக் கனலில் தகிக்க
எனைத் தூண்டும் இணையே மனம்
வென்று கரம் பிடிப்பேன்///

என்ன பங்கு ஆணி அதிகமா?

தினேஷ்குமார் சொன்னது…

வைகை said...
எதிர்பாரா அணைப்பில் நெகிழ
நெருப்பில்லாக் கனலில் தகிக்க
எனைத் தூண்டும் இணையே மனம்
வென்று கரம் பிடிப்பேன்///

என்ன பங்கு ஆணி அதிகமா?

ஆமாம் பங்கு ஆணிமேல ஆணி

தினேஷ்குமார் சொன்னது…

இளம் தூயவன் said...
இது சரிவராது விடுமுறைக்கு ஏற்பாடு பண்ண வேண்டியது தான் .

இதுக்குத்தான் சொல்றது தினேஷு புரியற மாதிரி கவிதை எழுதக்கூடாதுன்னு .....

தினேஷ்குமார் சொன்னது…

வினோ said...
சரி சரி எல்லாம் ரெடியா...

தல நான் எப்பவோ ரெடி ....

தினேஷ்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் யார்யா அது...... கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் இருக்கே?


யோவ் கவுண்டரே ஆமாம் எந்த மார்கமா இந்த பஸ் போகுது ......

தினேஷ்குமார் சொன்னது…

எஸ்.கே said...
superb மலர் தேடும் நார்! நாருக்கு மலர் சீக்கிரம் கிடைக்கட்டும்!:-)

பாஸ் ஏதோ தோணுச்சு எழுதிட்டேன் அதுக்காக இப்புடியா ஹையையோ ஆளவிடுங்க சாமியோ ...

தினேஷ்குமார் சொன்னது…

Philosophy Prabhakaran said...
என்னமோ நடக்குது... நடத்துங்க...


அதானே பிரபா என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ஒண்ணுமே புரியல உலகத்துலே ,,,,

தினேஷ்குமார் சொன்னது…

மதுரை சரவணன் said...
//எதிர்பாரா அணைப்பில் நெகிழ
நெருப்பில்லாக் கனலில் தகிக்க
எனைத் தூண்டும் இணையே மனம்
வென்று கரம் பிடிப்பேன்//

அருமை.. வாழ்த்துக்கள்

அண்ணே நீங்களாவது புரிஞ்சுகிட்டீங்களே இது கவிதைதான்னு .........

Unknown சொன்னது…

தலைப்பே கவிதையாக உணர்கிறேன் சகோ.. இதில நீங்க மலரா? நாரா?

sathishsangkavi.blogspot.com சொன்னது…

..நிந்தன் நிழல் தொட மலரும்
நினைக்கையிலே படரும் கோலக்
கொடிமுல்லையே பிரியா பிறவிதனில்
மறைவிதித்த புதுப்பிறவியாய்..

அருமை அருமை... வார்த்தைகளில் விளையாடி இருக்கறீங்க...

Unknown சொன்னது…

//அண்ணே நீங்களாவது புரிஞ்சுகிட்டீங்களே இது கவிதைதான்னு .........
//


இது கவிதை தான்...நீங்கள் கவிஞ்சர் தான்...

arasan சொன்னது…

ம்ம்ம்ம் ...
ஏதோ நடக்குது ...
விரைவில் தெரிய படுத்துங்க ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//மாண்டுயிர்த்த மலர்ச் சரமாய்......

மிகவும் அருமையா இருக்கு மக்கா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் யார்யா அது...... கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் இருக்கே?//

நான் அவர் கூடதாம்ய்யா இருக்கேன்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//எஸ்.கே said...
superb மலர் தேடும் நார்! நாருக்கு மலர் சீக்கிரம் கிடைக்கட்டும்!:-)///

சந்தேகமாத்தான் பாக்குராங்கப்பா...

Ram சொன்னது…

ஹீஹூம் இது சரியில்ல.. தினேஷ் என்ன ஆச்சு.???

சென்னை பித்தன் சொன்னது…

பூவோடு சேர்ந்தால்தான் நாரும் மணம் பெறும்!சேர்ந்து மணக்கும் சரமாகட்டும் அந்த நார்!

Philosophy Prabhakaran சொன்னது…

// அதானே பிரபா என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ஒண்ணுமே புரியல உலகத்துலே ,,,, //

நான் உலகத்துல நடக்குறத சொல்லல அண்ணே... உங்க உள்ளத்துல நடக்குறத சொன்னேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

தீவிரமா பொண்ணு பாக்க ஆரம்பிச்சதும் கவிதை எல்லாம் மாறுது தினேஷ். நடக்கட்டும்.... நடக்கட்டும்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி