சனி, 18 செப்டம்பர், 2010

தந்தை மனம்

பொன் நகைத்தது
பெண் நகைத்ததால் - இரவு
விண் வியக்கும் வீதியுலா
விடியற்பொழுதோ நின்
மணவிழா......

கண்ணாளன் கைப்பிடித்து
கரையேற துடங்கும் விழா
என் நினைவு வேண்டாம்
இனி உனக்கு......

கருவேலம் முள்ளிருக்கும்
காட்டு வழியல்ல - நின்
கைபிடித்தவன் காட்டும் வழி
பாதையில் முள்ளிருக்குமாயின்

வழியில் தைத்த முள்
நினை வழிமறிக்க போவதில்லை
முள்ளிற் பாதம் பட்டாலும்
சொல்லிற்க் காளாகாதே.....

பாதையை சீர்ப்படுத்தி - நின்
துணையின் கரம்பிடித்து
தொலை தூரம் பயணிக்க
என் அன்பு மகளே.........

6 கருத்துகள்:

Chitra சொன்னது…

கருவேலம் முள்ளிருக்கும்
காட்டு வழியல்ல - நின்
கைபிடித்தவன் காட்டும் வழி
பாதையில் முள்ளிருக்குமாயின்

வழியில் தைத்த முள்
நினை வழிமறிக்க போவதில்லை

....அருமையாக இருக்குங்க.

நிலாமதி சொன்னது…

தந்தை பாசம் அருமை. பொண்ணு சின்னவ தானே இப்பவே தொடங்கியாச்சா அறிவுரை சொல்ல.

தினேஷ்குமார் சொன்னது…

வணக்கம் சகோதரிகளே
நான் தூக்கி கையில் வைத்திருக்கும் குழந்தை என் அண்ணன் மகள் அஞ்சனாதேவி எங்க வீட்டு குலதெய்வம்
ஆனா சத்தியமா சொல்றேன் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை இப்பதான் பொண்ணு பாக்கற வேலையவே ஆரமிச்சிருக்காங்க வீட்ல அதுக்குள்ள ஒரு குண்ட போடுரீர்களே நாயமா இது..........
பிள்ளைய பெத்தாதான் பெற்றவங்க மாதிரி யோசிக்க முடயும்னு இல்ல என்ன பொருத்தவரை ஒவ்வொருத்தங்க நிலையை புரிந்துகிட்டு அந்த நிலைல இருந்து யோசித்தா அவர்களுடைய அவர்களுடைய நிலை புரியும் அதே அவர்களுடைய நிலையுள்ள சிந்தனையும் எழும் ஏதோ இந்த சின்னவனுக்கு தெரிந்தது..........

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

///கண்ணாளன் கைப்பிடித்து
கரையேற துடங்கும் விழா
என் நினைவு வேண்டாம்
இனி உனக்கு......///

அது எப்படிங்க... நினைவு இல்லாம போகும்?
அருமையான கவிதை.. :-))

ஹேமா சொன்னது…

தினேஸ் சின்ன மாற்றம்.வழியில் முள் இருந்தால் முள்ளை அகற்றி பாதை சீர்ப்படுத்தி துணையையும் கைப்பிடித்துப் போகும் தைரியம் கொடுங்கள் உங்கள் மகளுக்கு.

எஸ்.கே சொன்னது…

மனம் நெகிழ்கிறது! அருமை!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி