திங்கள், 2 மார்ச், 2015

"ஒவ்வொன்றும் ஓர்ச்சுவை பலகாரம்"


"பிரம்படி பட்ட பரமனை காண
பிரம்மனும் சித்தன் பிறவுவ கண்டுஅவன்
சொல்லாது ஒன்றனை செல்லாது கற்றிட
கல்லுக்குள் இன்னொரு கல்"

"தோகை மயிலாட மையலில் மன்னவன்
தோள்சேர் மமதையில் தோல்வி மயமாகி
மார்தழுவி நீருண்ட மேகமாய் பூவொற்ற
நார்சூடி பாரண்டம் மாயை"

"சிந்தும் மேனியில் சிந்தனை தீயிடு 
பந்தம் சேனையை பங்கிடா சேவைசெய் 
உந்தக் கூரென ஒன்றிலா கோட்டியை 
அந்தம் ஆக்குவ அன்றிலா ஆற்றலுள்"

"காயுந் தேகமே கானலில் நீந்திடா
மாய எந்திரம் மாதவன் தந்தது 
ஆய அந்தரம் ஆடுவன் சன்னதி 
தாயம் ஒன்றென சம்மதி உள்அவன்"

"கடுக்காய் கொணர்ந்தேன் கசக்கா குழந்தாய் 
உடுப்பாய் உணர்ந்தாள் உடலுள் ஒழுக்கம் 
கிடப்பார் அருந்த கெடுப்பார் வருந்த
கடப்பார் அரிதாய் கதவு திறந்தார்"

"அத்தனை ஆதங்கம் அண்டி பிழைப்போரே
பித்தனை போலென்னை பெற்றவன் போல்தன்னை 
சுத்தமாய் உள்ளுடுத்தி சூழ்ச்சியவிழ் மாயவன் 
சித்தனின் காடுஇது சீற்றமுற தாங்கா(உலகு )"

"கோட்டைசுவர் மேலமர்ந்து கொக்கரித்து நின்றான் 
ஆட்டகளம் கண்டிடாதன் ஆட்சிதனை கொண்டான் 
நாட்டினிலென் மக்களெல்லாம் நாதியற்று நிற்க 
கூட்டினிலே பட்டினியாய் குற்றமென்ன செய்தாய் ?"

"அந்தரத்தில் ஆடிடுதே அகமனதின் தோற்றம் 
சிந்தனையும் கூடிடவே சிலைவடிவாய் மாற்றம் 
சந்தித்த பாக்கியமே நான்பெற்ற கொற்றம் 
வந்திறங்கி ஆடுகிறான் மாயவனின் தோட்டம்"

"ஆலயம் தாண்டி வந்து யாரென கூறிசெல்லு
ஆதியும் தானென நீ ஆணவம் ஆளநில்லு"

"மெய்யும் பொய்யும் கலந்ததுவே 
செய்கை பொய்க்கா கலந்தனவே
பொய்யால் மெய்யை கலந்திடவே
மொய்க்கும் பொய்கள் கனவெனலாம்"

"கொட்டி தீர்க்க கோடியுண்டு 
          கோலம் தீரா பாரமுண்டு 
வெட்டி பெயர்த்த வேருண்டால் 
          வெள்ளம் வடிய வாய்ப்புண்டு 
சுட்டி கேள்வி வியப்பன்று
         சூடும் மல்லி மலரென்று
தட்டி திறவும் கதவண்டி
         தானே தகர்த்தல் தரமுண்டா"

"கற்றிட வேண்டி எண்ணம் 
        கருத்தினை ஆள வேண்டும் 
பற்றுதல் தாண்டி வண்ணம் 
        பழகுதல் அமைத்தல் வேண்டும் 
சற்றெனை அடக்கி உண்ணும் 
        சலனங்கள் அமிழ்தல் வேண்டும்
கொற்றவன் ஆண்ட திண்ணம்
        கொடுத்தெனை ஆள வேண்டும்"

"அழகினிற் அகங்காரம் அற்றதொரு 
        அலங்காரம் அமைத்தே அன்பொழியும் 
அவனியே அடைக்கல(ம்) அன்னையே 
        அடைகாக்கும் அழகாம்சம் ஆண்டவள் 
அளவினிற் அகங்கொண்ட அன்றெழ
        அதிகாரம் அமைதிநிலை அந்திவிழும்
அலைபோலே அதிகாலை அர்த்தமெய்
       அழகாடும் அளவெழுதும் அந்தரத்தான்"




சிறு குறிப்பு : முகநூலில் எழுதியவை இவை அனைத்தும் சுவைத்து பகிருங்கள் தங்கள் மேலான கருத்தை 

கருத்துகள் இல்லை:

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி