செவ்வாய், 24 மார்ச், 2015

மெய்எல்லையெ கைதாகுவன் பூர்த்தி...!

இன்றென்றென வெண்ணார்க்கரம் ஈன்றாளுவ காணே
நின்றுண்ணுவ கொன்றானென நீந்திச்செலல் காணே
அன்றெண்ணுவ இன்னார்க்குயர் அஞ்சாததைக் காணே
வென்றாளுவன் பொற்றாமரை மீட்டானெனக் காணே
பெற்றானெனை விற்றானெனப் பெய்யாமழை போர்த்தி
கற்றானவன் உற்றானுடை காற்றானவன் போர்த்தி
பற்றானது பந்தாளுவ பாராளுவன் கீர்த்தி
கற்றாளவன் மெய்எல்லையெ கைதாகுவன் பூர்த்தி

மனபோக்கிலே கடந்தேயுகம் மயமாகுது தனிலே
எனதாக்கிட வினைதூவிடும் இயலாதவர் தனிலே
வனவாழ்வினை கடந்தாலென மணந்தானவன் வினையே
தனதாகிடும் உணர்வாலவன் உதயத்தினை விளைத்தே
விலையாவதும் கலையாவதும் வினைத்தான்விளை பொருளே
மலையேறுவன் மழைதேடுவன் மனைதானது மயங்காய்
உலைவேகுது உடன்வாடுது உழைத்தாலுடன் வசமே
நிலையாவது நினைவானது நிழல்தானது உணராய்

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

ஊமைக்கனவுகள். சொன்னது…

ஆஹா,

காலம் இடைப்படும்முன் இமை சற்றே யணைந்திடுமுன்
கோலம் திருக்கோலம் இது காணா ரெது மறியார்!
ஓலந் தனையறியுந் துயரோலம் மகிழ்வோலம்
ஏலும் மனமெங்குந் தினேஷ் பாடற் பதிவாகும்!

எங்கேயோ போய்விட்டீர்கள்!

வாழ்த்துகள்!

ஊமைக்கனவுகள். சொன்னது…

ஆஹா,

காலம் இடைப்படும்முன் இமை சற்றே யணைந்திடுமுன்
கோலம் திருக்கோலம் இது காணா ரெது மறியார்!
ஓலந் தனையறியுந் துயரோலம் மகிழ்வோலம்
ஏலும் மனமெங்குந் தினேஷ் பாடற் பதிவாகும்!

எங்கேயோ போய்விட்டீர்கள்!

வாழ்த்துகள்!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி