ஞாயிறு, 14 ஜூலை, 2013

3.பித்தனின் சமையல்


11.சூதாட சூட்சுமம் வாதடி வந்தது
சூழலின் சூடும் சுடுமென் றறியாது
வாதத்தின் வாட்டம் உருமாறி உள்ளில்
கருவேரிட வேற்றுடல் தாண்டியும் காணேன்...

12.நில்லாது ஓடிடும் வெண்ணிலவின் பூரணம்
காண கடைக்கண் சிமிட்டி கருவிருள்
தாண்டி எனைத்தொட்டு தாலாட்டி செல்லமாய்
வின்னில் உலாவரும் உன்னதம் காணே...

13.என்னில் அறியாது எனை மீட்டும்
முருகா என்சொல் எடுப்பினும் அச்சொல்
அழகுடுத்தி ஆழ்ந்து வரும் துணையே
தமிழ்குமரா உன்னடி பனிந்தேன் பவணிவா...

14.மனக்கும் மருதமல்லி யேயுந்தன் சந்தமெனை
வாட்டுதடி மந்தம் பிடித்தலைய மாற்றுதினை
போற்றுதுனை மேற்க்கரையை கார்க்குவிய தேற்றும்
நரனல்லோ நான் எனக்கணிய யேதும்தா...

15.நானொரு குரல் பாவை நடனனின்
அருள் பாவை மழலையாய் அழும்
பாரேன் தகித்திடும் தாகம் தனியே
தினந்தோறும் ஓதும்வே தம்புதிதே...

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகுத் தமிழ் முருகன் துணை என்றும் உண்டு...

வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

செந்தமிழே செந் தமிழனே வருக...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி