திங்கள், 1 ஜூலை, 2013

1.பித்தனின் சமையல்


1.கனிந்ததோ காலை களைந்ததோ கண்டகனா
காணும் இடமெலாம் காட்சி பிழம்பாய்
ஆட்சி சொரூபனே நேரெதிர் சாட்சியாகி
நில்லானே சங்கடந் தீர்க்கும் மருந்தாய் ...

2.கந்தனை காணுமிடம் வெல்லும் தமிழமுதே
சிந்தனை நாணுமிடம் வெல்லும் கவியமுதே
வந்தனை செய்யுந் தொழிலே தந்தனை
போற்றி வழிபாடி வந்தேனே நான்...


3.உச்சி முடிகாண பட்சியான சிற்பன்
வடிதொழிலில் தைத்த வடு நதியாகி
நாணய மிச்சமிதி யாகி மதிசூட
மலர் ஆகிநின்ற பூதவுடலே சொல்கேளாய்...

4.அரிதிரி யென்றான் திரிய திரியாகி
தீரா சுடாராகி தீண்ட திருவாகி
தில்லை யுருவாகி திண்டாடி ஆடுறான்
நின்றுமின்று மீராது வாடுதே கன்று...

5.குழிசென்ற தன்கூடே வரியகுழி சென்றதெது
கூறே விரியுமவணி பொய்யுரை பூக்களே
பூத்ததோ புத்தகம் ஆதலின் ஆதலுடன்
வித்தகன் ஆக கடவது உன்மெய்...

4 கருத்துகள்:

சங்கவி சொன்னது…

:))

சே. குமார் சொன்னது…

ஆரம்பிக்கும் போது புரிந்ததையா...
முடிக்கும் போது புரிந்தும் புரியாமலும்...

நல்ல இருக்குன்னு சொல்றதைவிட நல்லா எழுதுகிறீர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

கொஞ்சம் விளக்கமும் கொடுத்தால் நல்லா இருக்கும்.

வாழ்த்துக்கள் தினேஷ்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

பிரேமி சொன்னது…

பாமர மக்களும் என்னைப் போன்ற தற்குரிகளுக்கும் புரிவது போல் புனையுங்கள் தோழமையே... (பித்தனின் சமையல் அந்த சித்தனிற்கு மட்டுமே புரியும் போலிருக்கே)

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி