திங்கள், 8 ஜூலை, 2013

2.பித்தனின் சமையல்


6.காட்டி மறைநின்றான் ஏட்டினில் கூறுவ
கேளும் கிடைக்கனலான் காட்டி நிறைச்செரியும்
கட்டுவன் கோட்டையுள் காணாது கிட்டுவன்
காட்டி உனைவடியும் பேராழி உள்ளேயுகம்..

7.முத்தெடுத்தான் முத்தெடுத்தான் மூழ்குதலை தத்தெடுத்தான்
தத்துவம்போல் கட்டிவைத்தான் கொட்டியவை தாம்தம்
அறிய தமக்குரிமை யாதெனவே குட்டுவைத்தான்
கொட்டியவன் தத்தெடுத்த பிள்ளையானை..

8.சத்திரத்து வீதியிலே சங்கமிக்கும் சூழலிலே
வாழியென வந்தால் மழைமுத்து மாரியெனை
வாரிஅணைத் துக்கொண்டால் தேரினில் வேந்தனைப்
போல்திகழ பாடல் பொழியேன் இன்று...

9.பட்டி யிலடைத்தான் பட்டான் படியமுதம்
புட்டி யிலடைத்து விட்டான் பிடியமுதம்
பக்தி யிலடைத்து தொட்டான் முழுஅமுதும்
புத்தி யிலடைத்தால் கிட்டும்...

10.அழகந்தி சிற்பம் அழகேந்தும் ஆலிலை
நீளா நிலையாகி மீண்டுவரும் நாளை
மிகையாகும் பார்வை தொடருந் துனிவு
படரப் பழிதங்கி பார்கடவும்...

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// முழுஅமுதும் புத்தியிலடைத்தால் கிட்டும்... ///

அருமை...

சே. குமார் சொன்னது…

சில புரிகிறது... சில புரியாமல் மீண்டும் படிக்கச் சொல்கிறது...

புரிந்து தெளிய மீண்டும் பல முறை படிக்க வேண்டும்...

அருமை.

சங்கவி சொன்னது…

ஆழ படித்தால் மட்டுமே உணரமுடிகிறது இதன் பொருளை....

பட்.. தமிழ் விளையாண்டுள்ளது உங்கள் வரிகளில்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி