வியாழன், 3 மே, 2012

தவழுதென் மனம்....!




தவழுதென் மனம் தாய்மையேந்தி 
தத்தித் தவழ்ந்து மழலை பேசி 
மழைச்சாரல் காற்றுடன் நீர்த்து 
பொங்குதென் உள்ளம் 

சொல்லிடர் சுருக்கங்கள் நீங்கி
மெல்லிய தாகம் என்னுள் சூழ
அகத்தே நீ உதைக்க புறத்தேக்
காணாத பேரின்ப வரம் 

கனவாகி உள்ளில் கருவாகி உன்னில்
உருக்கொண்டேன் தாயே யான்
உலகறிய சுகமான சுமையாய்
நாற்பது வார தவத்தில்

எனை மீட்டெடுத்த தெய்வமே 
ஆரத்தழுவி எம்மை அள்ளிக்கொள் 
அகம் காத்து புறம் வெல்லப் 
புயலாய் மாற்று என்னை

9 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

முதலிரண்டு பத்திகள் தாய் கொண்ட பூரிப்பை அழகாய் வெளிப்படுத்த, அடுத்திரண்டு பத்திகள் சேய் கொண்ட பெருமிதத்தை அழகாய் வெளிப்படுத்த, தாயும் சேயும் இணைத்த கவிதைநயம் மனங்கொள்ளை கொள்கிறது. பாராட்டுகள்.

புரிதலில் தவறெனில் பொறுத்தருள்க.

Thoduvanam சொன்னது…

"தவழுதென் மனம் தாய்மையேந்தி
தத்தித் தவழ்ந்து மழலை பேசி
மழைச்சாரல் காற்றுடன் நீர்த்து
பொங்குதென் உள்ளம்."

தாய்மை பற்றி மிக அருமையாய் எழுதி இருக்கீங்க.வாழ்த்துக்கள் .

செய்தாலி சொன்னது…

தாய்மையில்
பூரித்து உருகும்
தாய் மனம்

நாளை வெல்ல
மெருகேற்று எனும் சேய்

தாய் சேய் பிணைப்பு
அற்புதமாய் சொல்லப்பட்டு இருக்கு சார்

மகேந்திரன் சொன்னது…

பட்டுமேனி தொட்டுத் தழுவி
தாலாட்டு பாடிட..
ஏங்காத மனமும் எங்குமே..
பிள்ளைக் கனியமுதைக் காண்கையிலே..

சசிகலா சொன்னது…

தாயவள் அரவணைப்பில் மகிழாத உயிர் உண்டோ அருமையான வரிகள் அழகு .

சத்ரியன் சொன்னது…

தாயின் புகழ் உரைக்கும் கவியாக்கம் சிறப்பு தினேஷ்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான கவிதை சார் !

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

//கனவாகி உள்ளில் கருவாகி உன்னில்
உருக்கொண்டேன் தாயே யான்
உலகறிய சுகமான சுமையாய்
நாற்பது வார தவத்தில்//

ஒரு தாய்மையின் மன உணர்வு அப்படியே கவிதை வரிகளாய். வாழ்த்துக்கள்.

Swapna 2v சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி