ஞாயிறு, 25 மார்ச், 2012

ஓவியமாய் தீட்டி வச்சாங்க......!

அத்தனையும் படிச்சான் 
அங்கெங்கும் அலைந்தான் 
ஆள்பதற்க்கு மட்டும் திரையில்
ஆட்டம் போட்டவரை பிடித்தான்

இடிச்சப்புளி உலக்கயிலே
இளஞ்சிவப்பா இளிக்குதையா
ஈசன் கட்டுவான் இல்லாமல்
ஈட்டெடுக்கலாம் நாளை

உசிரக் குடிக்கான் மறுக்கா 
உரக்கம் தெளியவே யில்லை
ஊதிக் கொக்கரிக்க நாதியுமில்ல
ஊலைநரிக் கூட்டம் போட

எட்டி பார்க்குது எங்ககிட்ட
எட்டனா தான் எஞ்சி நிக்குது
ஏட்டையும் மாத்திபுட்டான்
ஏணியையும் தட்டிவிட்டான் 

ஐந்தும் அவர்கட்கே என்றால்

ஒட்டு துணிக்கேது வழி விரல்
ஒட்டிய மையை துடைக்க
ஓட்டாண்டி ஆக்கிவிட்டாங்க
ஓவியமாய் தீட்டி வச்சாங்க
 
ஔ..........................................

7 கருத்துகள்:

முத்தரசு சொன்னது…

வரிகளில் உயிருள்ள எழுத்துக்கள் சும்மா பொறி கலங்குதுங்க

Unknown சொன்னது…

மனசை உறுத்தும் யதார்த்தம். அரசியல் நாடகத்தில் நாம் கோமாளிகள் ஆவதை உங்கள் கவிதை உணர்த்துகிறது .

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எண்ணத்த சொல்ல இவிங்களை அவிங்க பாடு சந்தோசம் மக்கள் பாடு திண்டாட்டம்.....!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லா இருக்குங்க ! நன்றி !

சசிகலா சொன்னது…

செல்லாக் காசாக்க நமக்கு வைக்கும் அடையாளம் கவி வரிகள் உண்மை சொல்கின்றன .

கீதமஞ்சரி சொன்னது…

அகரம் முதல் ஔகாரம் வரை பகர்ந்திருக்கும் பா மிக அழகு.

ஆகாரம் தவிர்த்தவனிடத்தில் ஆங்காரம் எழும்நாளில்தான் ஓங்காரமாய் ஒலிக்கும் அவன் குரல்!

சசிகலா சொன்னது…

வலைச்சரத்தில் தங்கள் பதிவை பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன் .

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி