திங்கள், 7 நவம்பர், 2011

இணையத்தின் ஓட்டம்....!

தனிமையின் தாகந் தீர்க்கவல்ல
சுவைமிகு மருந்தே பதிவுலகச் சுடரே
தாகம் தனிந்தே வெறுமையின் ஏக்கங்கள்
மறைந்தென்னில் மலரும்


அன்புக் கரங்களின் அரவனைப்பில் அகிலமும்
வளம்வர அரங்கத்தே காணா அவதறிப்பு
அனுதினம் அலைகடலாய் அன்பின் 
ஆர்ப்பரிப்பு என்றும் மாறா


கலங்குவதேன் கண்மணியே காரணத்தே
காலமிகுதியில் சேர்வனச் சீரும் சிறப்பே
நலமிதோ நவிலும் நாவண்ணம் கூற 
குரலினும் அறியாக் குழந்தாய் 
  
மலரினில் தேடும் கலனிலா சூடும்
பகலவன் சாடும் இரவணிக் கூடு 
இமைகளின் நாட்டம் இருதயக் கூட்டம் 
இணையத்தின் ஓட்டம் இனிது 


11 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முதல் ஓட்டம்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதை சூப்பரா புரியுதுய்யா வாழ்த்துக்கள்...!!!

Unknown சொன்னது…

மாப்ள நல்லா இருக்குய்யா!

rajamelaiyur சொன்னது…

//
கலங்குவதேன் கண்மணியே காரணத்தே
காலமிகுதியில் சேர்வனச் சீரும் சிறப்பே
நலமிதோ நவிலும் நாவண்ணம் கூற
குரலினும் அறியாக் குழந்தாய்

//

நல்ல வரிகள்

Chitra சொன்னது…

கலங்குவதேன் கண்மணியே காரணத்தே
காலமிகுதியில் சேர்வனச் சீரும் சிறப்பே
நலமிதோ நவிலும் நாவண்ணம் கூற
குரலினும் அறியாக் குழந்தாய்


..... very nice.

மகேந்திரன் சொன்னது…

//மலரினில் தேடும் கலனிலா சூடும்
பகலவன் சாடும் இரவணிக் கூடு//

தேனென இனிக்கும் சொல்லாடல்,
கருத்துக்களை எத்தனை அருமையாய் ஏற்றிக் கூறியிருக்கிறீர்கள்.
கவி நன்று நண்பரே.

Philosophy Prabhakaran சொன்னது…

// கவிதை சூப்பரா புரியுதுய்யா //

ROFL...

சத்ரியன் சொன்னது…

அருமை தினேஷ்.

இணையம் தனிமைக்கு மருந்து மட்டுமல்ல. பல நேரங்களில் தனிமையை உருவாக்குவதே இணையம் தான்.

ஹேமா சொன்னது…

வாங்க தினேஷ்.இணையமும் அளவோடு உறவடினால் அதுவும் ஒரு உறவுதான்.கவிதை சிறப்பு !

கீதமஞ்சரி சொன்னது…

இணையத்தின் துடிப்பு நின்றால் இதயத்தின் துடிப்புமன்றோ நின்றுவிடுகிறது. காலத்தின் கட்டாயமெனினும் கட்டுக்குள் ஓடினால் யாவும் நலம் மேவும். கவிதை நன்று.

Alpha சொன்னது…

நல்லதொரு பதிவு! நேரமிருந்தால் அறிவுக்களஞ்சியம் எனும் பதிவையும் பாருங்கள்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி