வியாழன், 10 நவம்பர், 2011

தவறென்ன யான் செய்தேன்....?

இமைக் கூடி இயல் தாண்டி 
இணைத் தாவி இதழ்ச் சூடி
இடைச் சாடிய கரந்தழுவ 
மறந்தென்னில் மலர

உனக்குள்ளே உயிர்ப்பித்து 
உருக்கொண்டேன் உடனழிக்க 
தவறென்ன யான் செய்தேன்
உடையவளேக் கூறு

இணங்கி இடமளிக்க நாழிகையும்
இதமளிக்க இன்பத்தின் உச்சத்திலே
உலவுகின்ற நிலவும் உடனிருக்கும் 
கனவுல கல்லவே காட்சி

சாட்சி சொல்வோன் நானென்றே
மனம் சலசலக்க வினவா விளைவித்து 
விளையாட்டாய் காரணித்து வினைத்து 
விடை யளித்ததேனோ..?

8 கருத்துகள்:

NAAI-NAKKS சொன்னது…

நோ கமெண்ட்ஸ் :((

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

அந்தப் படம் பார்க்க பயங்கரமா இருக்கு..

தங்கம்பழனி சொன்னது…

ஓ..!! படத்தைப் பார்க்கவே முடியவில்லை. கவிதையை விட படமே சொல்கிறது அந்த பயங்கரத்தை..!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அந்தப்படமே ஆயிரம் கதை சொல்லி அழவைக்கிறதுய்யா கஷ்டமா இருக்கு...

FOOD சொன்னது…

கொடுமை சார்.

சே.குமார் சொன்னது…

கவிதையும் கவிதைக்கான படமும் வலியை விதைத்து மனசை அறுவடை செய்கிறது.
வாழ்த்துக்கள் தினேஷ்...

ViswanathV சொன்னது…

அண்ணா
நான் vegetarian.
ஐயம் சாரி

சத்ரியன் சொன்னது…

யப்பா...!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி