வெள்ளி, 14 அக்டோபர், 2011

வாழ்த்தி வழி கூறுங்கள் ...!


நினைவுகள் நீந்தி செல்கின்றன கடந்த
காலங்களை நோக்கி வழியெல்லாம்
நில்லாச் சுடராய் தாய்மடி தவழ்ந்து 
தந்தைக் கரம் பற்றிய மழலையாய்   

ஆட்டுவித்தோர் காட்டுவித்த பாதைகளில் 
பயணிக்க கொடுத்தோர் கிடைப்பினில்
நெடுந்தொலைவு கடந்தும் நீளும்
பாதைகள் முற்றமிலா 

கரை யேறுகனம் நழுவ முகமறியா
எனைத் தழுவும் காட்சிகளின் ஆட்சிதனில் 
நிறைந்தோனைத் தொழுது இடைநாளின் 
கடைப்படி மறையுந் தருணம் 

அன்புள்ளங்கள் எம்மைச் சூழ்ந்து வர 
மேற்ப்படியறிய தொடரும் பயணத் துவத்தில்
சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் இச்சிறியவனை
வாழ்த்தி வழி கூறுங்கள் 

14 கருத்துகள்:

RAMVI சொன்னது…

இன்றைக்கு உங்க கவிதை நன்றாக புரிந்தது தினேஷ்..

//மேற்ப்படியறிய தொடரும் பயணத் துவத்தில் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் இச்சிறியவனை வாழ்த்தி வழி கூறுங்கள்//

வாழ்த்துக்கள்.

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதை புரிஞ்சிது ஹி ஹி...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ்மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு, நீர் பிசின்னு எனக்கு தெரியும் நடக்கட்டும்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கலக்கு தினேஷ், என் வாழ்த்துக்கள் என்றும் உண்டு......!

சத்ரியன் சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Kannan சொன்னது…

மிகவும் அருமையான கவிதை.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

வெளங்காதவன் சொன்னது…

வாழ்க!
#நான் பொடியன்....

ViswanathV சொன்னது…

மனதில் உறுதியும்
வாக்கில் உண்மையும்
செய்யும் செயலில் அடுத்தவர்க்கு நன்மையையும்
இருக்குமெனில்
வெற்றி உமதே;

Rathnavel சொன்னது…

அழகு கவிதை.
வாழ்த்துக்கள்

மகேந்திரன் சொன்னது…

அருமையான கவிதை.....

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

ஒரு நல்ல கவிதை ..,
என் வாழ்த்துக்கள் எப்போதும் உங்களுக்கு..

மாலதி சொன்னது…

அன்புள்ளங்கள் எம்மைச் சூழ்ந்து வர
மேற்ப்படியறிய தொடரும் பயணத் துவத்தில்
சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் இச்சிறியவனை
வாழ்த்தி வழி கூறுங்கள் //மிகவும் அருமையான கவிதை....வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

வாழ்த்துக்கள்..! மென்மேலும் சிறக்க!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி