வியாழன், 23 ஜூன், 2011

கண்ணிருண்டு கனவுகண்டேன் ....


கண்ணிருண்டு கனவுகண்டேன்
செவி யுணரா ஓசைக்கேட்டேன்
பழியுனர்த்தும் பாஷாணம் கொண்டு
பரியமர்ந்து வாரான் கண்ணே

பட்ட விதை துளிர்க்க எண்ணி
பாதை மாறும் பச்சிளம் கன்று
சட்டை பையில் சாட்சிக் கொன்று
விசிறி நடக்கு விதியாமிங்கு

மதியுண்டோன் வினைத்து விற்க்க
பழியெல்லாம் விதியின் படியில்
சுண்ணாம்பு சேருமிடம் சாருண்ட
மாருமிடம் எவரறியோம் ...

11 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//மதியுண்டோன் வினைத்து விற்க்க
பழியெல்லாம் விதியின் படியில்
சுண்ணாம்பு சேருமிடம் சாருண்ட
மாருமிடம் எவரறியோம் ...//

அருமை தினேஷ்...

rajamelaiyur சொன்னது…

அருமையான கவிதை நண்பா

A.R.ராஜகோபாலன் சொன்னது…

ஆயிரம் அர்த்தங்களை கவிதையாய் அள்ளிதெளித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
தமிழ்மணம் மூலமாகவும் கொடுத்தாச்சி

மோகன்ஜி சொன்னது…

நன்று தினேஷ்!

சென்னை பித்தன் சொன்னது…

ஊன்றிப் படிக்க வேண்டிய கவிதை!நன்று!

தமிழ்தாசன் சொன்னது…

அருமை அருமை

நிரூபன் சொன்னது…

அருமையான கவிதை, எம் உடலிலுள்ள புலன்கள் செய்யும் வித்தைகளைச் சொல்லியிருக்கிறீங்க...

ஹேமா சொன்னது…

தினேஸ்....உங்கள் கவிதைகளில் தமிழின் வனப்பு மிகவும் அதிகம் !

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கண்ணிருண்டு கனவுகண்டேன் செவி யுணரா ஓசைக்கேட்டேன்//

அருமையான கனவு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை தினேஷ்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஓரளவு புரிஞ்சிடுச்சு ..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி