வெள்ளி, 17 ஜூன், 2011

மா மாயை ....!




நாழிகைகள் நரகத்துள் பயணிக்க
தாண்டவமாடும் தேகமது தகனமாகி
நாற்றிசையும் சுட்டெரிக்கும் வட்டறியா
மரணமடி வினவுதங்கே...?

கள்ளுண்டு கலனும் தளும்ப நீருண்ட
நாருமது மாற்றமிலா வேருமது
சுருண்டு கடையேனும் நர்த்தனமிலா
அர்த்த சண்டன கண்டம்

தீருமது வேள்வியிலா சாரமதில்
நீலகண்ட நிலைக்கள்ளான் நினைவுறுத்தி
நாளுமது நகையாலும் சூலத்தின் சூழ்ச்சி
கண்டான் நாவாலும் சிறக்க

சித்தமங்கே சரித்து வாரோன்
ஏற்றமெல்லா சமர்த்துவானேன்
சித்திரம் கண்டதோர் கானகம்
மீண்டுயிர்த்து செழிக்கும்.

6 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

//வினவுதங்கே.//
என்னது வினவா? ஆளை உட்றா சாமியோவ்வ்வ்வ்வ்

தமிழ்க்காதலன் சொன்னது…

அன்புத் தம்பி, புலமை மிக்க எழுத்துக்கு சொந்தக்காரனே, இந்தக் கவிதையின் உட்பொருள் வாழ்வியலின் நிலையாமை சொல்லி, உயிர்ப்பின் நிலைப்புத் தன்மை பேசுகிறது. அருமையான படைப்புகள் தொடரட்டும்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அசத்துலேய் மக்கா....!!!

Unknown சொன்னது…

தமிழ் புலவா நன்றி உம்ம கவிதைக்கு!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கல்யாணம் ஆகியும் மாப்ளை இன்னும் திருந்தல போல ஹி ஹி

A.R.ராஜகோபாலன் சொன்னது…

நாட்களின் நகருதலில்
நடப்பவை எல்லாம்
நிலைப்பவை அல்ல
நிகழ்பவை எல்லாம்
நிற்பவை அல்ல
என நிதர்சனமாய் சொல்லிய கவிதையும் அதை படைத்த விதமும் அபாரம்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி