வியாழன், 1 டிசம்பர், 2011

"நாற்திசைத் தேடும் குருவி ....!"

நாற்திசைத் தேடும் குருவி 
உந்தன் கனவென்ன சொல்லேன்
அள்ளிக்கொடுக்க உலகளந்தான்
கள்ளம் விளைத்ததுண்டோ

சோலைத் தேடி எந்தன் சுவாசம்
பச்சை சேலைக் கண்ணுருத்தும் காலம்
கனவாகி தினம் உண்ண மிச்சம்
எச்சம் தந்த வலிகள்

உயர பறக்கிறேன் உடனெழுந்த 
கட்டிட உச்சம் சன்னலோரம் கூடு
சல்லடையாக நிலப்பரப்பு நீள
குற்றம் செய்ததென்னவோ 

குடைந்துருக்க கடைந்தடுக்க 
கார்ப்பசித் தீர்ப்பாயோ நிழல் 
காணும் மானிடா நினைவங்கில்
நிலைத் தொடரா முற்றும்

கலியுகம் :- நான்கு திசைகளிலும் தேடியலையும் குருவியே உன் கனவு என்ன சொல்லேன் கடவுள் அள்ளிக் கொடுக்க அவர் மனதில் கள்ளம் ஏதும் இல்லை சோலைகளைத் தேடுகின்றேன் எந்தன் சுவாசம் முட்ட பச்சை சேலைப்போர்த்திய வயல்கள் கண்ணுக்கு இன்று கனவாகி போகின்றன இயற்க்கை உணவுகளை விளையும் நிலத்திலே சென்று உண்ணும் நாங்கள் இன்று எச்சம் உண்ணும் நிலையில் ...... இன்னும் ஆயிரம் கருத்துக்கள் உள்ளே அடக்கம் 

16 கருத்துகள்:

Unknown சொன்னது…

மாப்ள தப்பா எடுத்துக்காத...சத்தியமா புரியல...கோச்சிக்காம என்னைய மாதிரி மக்குக்கு விளக்கம் ஒன்னு போடு ப்ளீஸ்!

சக்தி கல்வி மையம் சொன்னது…

குடைந்துருக்க கடைந்தடுக்க
கார்ப்பசித் தீர்ப்பாயோ நிழல்
காணும் மானிடா நினைவங்கில்
நிலைத் தொடரா முற்றும்///
அசத்தலான வரிகள் ., உயந்த தமிழில்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பறவைகள் அழிந்து வருகிறது ஸாரி அழித்து வருகிறோம் என்பதே உண்மை...!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை.

வெளங்காதவன்™ சொன்னது…

:)

நாய் நக்ஸ் சொன்னது…

இந்த வாட்டி தான் விளக்கம் கொடுத்துள்ளீர் ....நன்றி ....

ஹேமா சொன்னது…

இனிக்க இனிக்கத் தேன்தமிழ்.இயற்கை அழிவுகளின் ஏக்கம்.அருமை கவிஞரே !

ராஜி சொன்னது…

சோலைத் தேடி எந்தன் சுவாசம்
பச்சை சேலைக் கண்ணுருத்தும் காலம்
கனவாகி தினம் உண்ண மிச்சம்
எச்சம் தந்த வலிகள்
>>
கூடவே வேதனை தர வேண்டிய வலியும் கூட

கீதமஞ்சரி சொன்னது…

சிட்டுக்குருவிகளை அழித்துவிட்டு அவற்றுக்கு தினமொன்று (மார்ச் 20)வைத்துக் கொண்டாடுகிறோம், பெற்றவருக்கு ஒருவாய் சோறு போடாதவன், அவர் மறைந்தபிறகு ஊரைக்கூட்டி படையல் விருந்து போட்டுப் பரிகாரம் தேடுவதைப்போல்!

குருவி மட்டுமல்ல, மனிதமே அழிந்துகொண்டுவருகிறது. கவி உரைக்கும் கருத்து நெகிழ்த்துகிறது. பாராட்டுகள் தினேஷ்.

விஸ்வநாத் சொன்னது…

எங்க அறியாமையை விலக்க
கவிதைக்கு விளக்கம் இங்கே இருக்கு;
பாவம், குருவிகள்; அவைகளோட
வேதனையத் தீர்க்க
வயல்கள் பயிர்கள் எங்கே இருக்கு ?

Note: 'ற்' ருக்கு அப்புறம் 'த்' வராதுன்னு நினைக்குறே (நாற்திசைத்). தெரிஞ்சவங்க சொன்னா
கேட்டுக்குறோ.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன்.
இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன்.
அருமையான கருத்துக்கள். பகிர்விற்கு நன்றி நண்பரே!
தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

G.M Balasubramaniam சொன்னது…

அன்பு தினேஷ் குமார், இன்று உங்கள் பதிவைப் படித்ததும் ஒரு நிறைவு ஏற்பட்டது. எண்ணங்கள் புரிந்ததும் எழுத்துக்கள் ரசிக்க வைத்தன. விளக்கம் வாசிப்பவரை அடுத்த நிலைக்கு உயர்த்த உதவும். பாராட்டுக்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

//குடைந்துருக்க கடைந்தடுக்க
கார்ப்பசித் தீர்ப்பாயோ நிழல்
காணும் மானிடா நினைவங்கில்
நிலைத் தொடரா முற்றும்//

கார்ப்பசி...?
நினைவங்கில்..?..

இந்தப் பகுதியையும் விளக்கி இருக்கலாமோ.?
(விளக்கம் கோருவது நான் மட்டும் அல்லவே..)

praveen சொன்னது…

super
ithu paravika illai manitharuka

பெயரில்லா சொன்னது…

வரிகள் + விளக்கம் பிடித்தது...வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி