திங்கள், 3 அக்டோபர், 2011

"பிறவித் தேடல்"


காலை கனியும் அந்திமக் கதிரில்
மலர்சூடும் மாலை மஞ்சள் வெயில்
வழித்தேடும் விழிதனில் வினவா அழைப்பு
விடையில்லா பிரிவா புரியும்...?

இரவின் உறக்கம் இமைகளோ மறுக்கும்
கனவினில் பறக்கும் மனமெல்லாம் இனிக்கும்
தண்ணீர் தகிக்கும் அடுப்பனல் குளிரும்
தீஞ்சுடர் தாங்கும் கரங்கள்...!

உள்ளில் பிறக்கும் உணர்வில்லா வலிக்கும்
உண்மை புரியா பிரியம் ஈர்க்கும்
பெற்றவர் எதிர்க்க அம்புகள் படரும்
அன்பினில் உணராச் சுருக்கு.

இருமனச் சங்கமம் இறைதனில் வகுத்தது
பிழைதனில் பயணம் ஏன்? பிறவா
பிறவியும் அடங்கும் பயனில்லா பாதைதனில்
ஏற்றாச் சுடரினில் தொடரும் தேடல்.


கலியுகம்: - சமயங்கள் வேலை நேரங்களில் கழிவதால் அன்பர்களுக்காக ஒரு மீள் 

17 கருத்துகள்:

K சொன்னது…

கலக்கல் கவிதை தினேஷ் அண்ணே!

சக்தி கல்வி மையம் சொன்னது…

இருமனச் சங்கமம் இறைதனில் வகுத்தது
பிழைதனில் பயணம் ஏன்? பிறவா
பிறவியும் அடங்கும் பயனில்லா பாதைதனில்
ஏற்றாச் சுடரினில் தொடரும் தேடல்.//
அருமையான வரிகள், அசத்தலான கவிதை..

வெளங்காதவன்™ சொன்னது…

ஹி ஹி ஹி ஹி............

தமிழ் தெரியாது தல....

#ஜூப்பரு........

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அப்படா இப்பதான் கவிதை கொஞ்சம் புரிய ஆரம்பிச்சிருக்கு, சக்தி'கிட்டே செமையா அடிவாங்கி இருப்பார் போல...ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ்மணம் காணலை, எனக்கும் இன்ட்லிக்கும் வாய்க்கா தகராறு....

சத்ரியன் சொன்னது…

/அன்பினில் உணராச் சுருக்கு...//

அருமை...அருமை...அருமை.. தினேஷ்.

சத்ரியன் சொன்னது…

//எனக்கும் இன்ட்லிக்கும் வாய்க்கா தகராறு....//

ஏற்கனவே அந்த ஊரு பொண்ணுகளுக்கும், நம்ம ஊரு பையன்களுக்கும் தகராறு.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

உணவு உலகம் சொன்னது…

கவிதை நடை அனைவரையும் கவரும்.

rajamelaiyur சொன்னது…

Super Kavithai . . .

rajamelaiyur சொன்னது…

All lines are super

thendralsaravanan சொன்னது…

அருமை!அருமையான வரிகள்....

கோகுல் சொன்னது…

உள்ளில் பிறக்கும் உணர்வில்லா வலிக்கும்
உண்மை புரியா பிரியம் ஈர்க்கும்//

nallaarukkunga!

சீனுவாசன்.கு சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி நண்பரே!உங்களால் நான்
செழுமையாகிறேன்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

மீள் பதிவானாலும் தூள் பதிவு தினேஷ்.
வாழ்த்துக்கள்.

விஸ்வநாத் சொன்னது…

இப்போதா கொஞ்சம் கொஞ்சமா புரியற மாதிரி இருக்கு;

உண்மைய சொல்லனும்னா கவிதை விட ஒங்க
கவிதைக்கு வர கமெண்ட்ஸ் கலக்கல்;

vetha (kovaikkavi) சொன்னது…

''..இருமனச் சங்கமம் இறைதனில் வகுத்தது
பிழைதனில் பயணம் ஏன்? பிறவா
பிறவியும் அடங்கும் பயனில்லா பாதைதனில்
ஏற்றாச் சுடரினில் தொடரும் தேடல்...''
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி