வியாழன், 1 செப்டம்பர், 2011

வினைத் தீர்க்கும் நாயகனே...!


வந்தனம் வந்தனம் சாமியோ
வழிதேடி வந்தேன் நான் சாமியோ
வழிகாட்ட ஓடிவந்த சாமியோ
வணங்கி கும்புடுறேன் சாமியோ

பச்சிளம் குழந்தை தான் இன்னமும்
பள்ளிப் பாலகனாய் எண்ணமும்
பகுத்தறிவு புகட்டிவிடு இன்னமும்
பனைப் போல வளர்ந்திடுமே எண்ணமும்

அவல் பொறி கடலை படையலும்
பிடிகொழுக்கட்டை அரைப்படி சுண்டலும் 
ஆணைமுகன் உன்னை வணங்கியே
விளைக்கதிர் தானியப் படையலும்


சன்னதியில் கண்டதில்லை உன்னையும்
ஓர் உருவம் உனக்கில்லை எங்கிலும்
பல உயிரில் கலந்திருக்காய் பல திக்கிலும்
வினைத் தீர்க்கும் நாயகனாய் ... 


அனைவருக்கும் நல்லருள் புரிய வேண்டும் சாமியே .....!

14 கருத்துகள்:

Unknown சொன்னது…

கல்க்கல்ய்யா மாப்ள! விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் சொன்னது…

வி்நாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

rajamelaiyur சொன்னது…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வினைத் தீர்க்கும் நாயகனாய் ...


அனைவருக்கும் நல்லருள் புரிய வேண்டும் சாமியே ....//

விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

கவி அழகன் சொன்னது…

விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

thendralsaravanan சொன்னது…

நல்ல விநாயகன் துதி!

மகேந்திரன் சொன்னது…

வி்நாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வி்நாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

சத்ரியன் சொன்னது…

வினை தீர்ப்பான் விநாயகன்...!

//அவள் பொறி கடலை படையலும்//

இதில் அவள் = அவல் -ஆக வேண்டும் என நினைக்கிறேன்.

arasan சொன்னது…

நல்ல கவிதையினால் விநாயகன் பெருமை பாடிய உங்களுக்கும் ஆசி கிடைக்கட்டும்

RAMA RAVI (RAMVI) சொன்னது…

அருமையான துதி..
விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்..

சாந்தி மாரியப்பன் சொன்னது…

எங்கூர்ல பத்து நாட்கள் கொண்டாட்டமாக்கும். அதனால, இன்னிக்கு சொன்னாலும் தப்பில்லை :-))

புள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் சகோ.

vetha (kovaikkavi) சொன்னது…

''...சன்னதியில் கண்டதில்லை உன்னையும்
ஓர் உருவம் உனக்கில்லை எங்கிலும்
பல உயிரில் கலந்திருக்காய் பல திக்கிலும்
வினைத் தீர்க்கும் நாயகனாய் ...''
இந்தக் கவிதை மிக இலகுவாக விளங்குகிறது. நன்றி சகோதரா! எங்கே இவைகளை இப்படி நல்ல மரபாக எழுதப் படித்தீர்! ஓ! அற்புதம் 2 நாட்களாக உமக்கு கருத்திட முயற்சித்துத் தோல்விகண்டேன் எங்கோ றீடிறெக்ரிங் என்று என்னை அனுப்பி களைத்து விட்டேன் இதென்ன ! என்று சோர்ந்தேன். இன்று நல்ல முறையில் வழி வந்துள்ளது.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி