வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கீரிய காரிய மறியேன் ....!

சத்திரமோ சிறகணிச் சித்திரமோ
சாந்தமணி சன்னதியில் நாதனின்
சிந்தனைச் சிந்திய காவியமோ கல்லொன்றில்
சீவிய சிற்பமணிக் கூடோ

கருவிழி தொடர நிறந்தனில் விருட்சம்
கானக சுடராய் நாற்ற மத்தியில்
கிருதய பயனாய் நடந்தொரு கூடாய்
கீரிய காரிய மறியேன்



நதியாய் நாணலாய் விண் மதியாய் 
நாளுயர நாவறண்ட நரனாகி
நிறைத் தவழ நினைத் தொழும்
நீரண்ட நீதியின் வடு ......

கவரும் கலையின் கருவே கனலாய்
கானலின் காதலாய் காவலின் காகிதமே
கிளையின் கிடப்பினில் கிளியாய் கிறங்க
கீழலைக் கீதம் மறவே....



அங்கிலா எண்ணம் உடைத்து கண்ணிலா
காரியக் குடுவை மாறிய மடையுடைய
தேடியவன் சாடி வருவ சூடு
மலரிடத்து மனம் தவழும்Edit

11 கருத்துகள்:

நாய் நக்ஸ் சொன்னது…

கொஞ்சம் கோனார் நோட்ஸ்-ம் கொடுத்தால் பதிவு எல்லாரையும் சென்றடயும் ....என்பது என் கருத்து

Unknown சொன்னது…

மாப்ள கவிதை போட்டுட்டு பக்கத்துலையே என்னைய மாதிரி பாமரனுக்கு புரியிராப்புல விளக்கத்துடன் போடுய்யா....மனோவ நம்பாத புரிஞ்சா மாதிரியே தலையாட்டுவான் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

விக்கியுலகம் said...
மாப்ள கவிதை போட்டுட்டு பக்கத்துலையே என்னைய மாதிரி பாமரனுக்கு புரியிராப்புல விளக்கத்துடன் போடுய்யா....மனோவ நம்பாத புரிஞ்சா மாதிரியே தலையாட்டுவான் ஹிஹி!//

எப்பிய்யா இம்புட்டு கரிக்டா கண்டு பிடிச்சே ராஸ்கல்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இதென்ன ஓணம் பற்றிய கவிதையா ஹி ஹி...

மகேந்திரன் சொன்னது…

//நதியாய் நாணலாய் வின் மதியாய்
நாளுயர நாவறண்ட நரனாகி//


தமிழ் விளையாடி இருக்கிறது
உங்கள் கவிதையில்
ஏடேறும் கவிதை.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இதுக்கான விளக்கம் அடுத்த பதிவுலயா?

Unknown சொன்னது…

சிறுசிறு அலையாய்
சென்று மடிந்த
நறுந்தமிழ் கவிதையில்
நடனம் ஆடிட
விருந்தென சொற்கள்
விளங்கிட வரிகளில்
அருந்தெனத் தந்தீர்
அன்பரே! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

சத்ரியன் சொன்னது…

தினேஷ்,

சிறப்போ சிறப்பு.

(ஓரிரு எழுத்துப்பிழை இருக்கு. சரி செய்துடுங்க.)

'பரிவை' சே.குமார் சொன்னது…

kavithai Super.

Aathira mullai சொன்னது…

சற்று கடின நடை. ஆனால் அருமை.

vettha.(kovaikavi) சொன்னது…

அப்பப்பா எங்கே படித்தது இதுவெல்லாம்!.....
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி