தெற்கே கெடிலம் நதி ஆடிவர
வடக்கே தென்பெண்ணை பாடிவர
கரும்பாக இனிக்குதையா எந்தன்
தாய் மண்ணின் நினைவலைகள்
ஊரை சுற்றி சுற்றி வீற்றிருக்கார்
அம்மை அப்பன் காட்சியாக - சாட்சி
கைலாசநாதரும் பூலோகநாதரும்
திருகண்டேஸ்வரருமாக மத்தியிலே
அவரைப்பற்றிச் சொல்லனும்னா
அறிந்தவை சில அறியாத பொக்கிஷங்கள்
பல உண்டு அவர் திருநாமம்
உச்சரிக்க பலனுண்டு
கரும்புக்கு பேர்ச்சொல்லும் சக்கரையாய்
நாவினிக்கும் நெல்லிக்குப்பம் தானுங்க
கிழக்கால கடலூரு மேற்கால பண்ரூட்டி
பலாப்பழம் தானுங்க
தாமஸ் பாரிக் கட்டிவச்சான்
கிழக்கிந்திய சாராய வடிப்பகம்
பல்லாயிரம் உசுருக்கு வாழ்வளிக்கு
நானும் பிழைத்தவன் தான்
சாதிச்சண்ட பலவுண்டு சங்கதியெல்லாம்
நடந்திருக்கு சப்தமில்லா ஊருமது
இப்போ சண்டையில்லாம அடங்கிருக்கு
ஊரு சனம் திருந்திருக்கு
பால்யத்து இனிமைகள் கண் முன்னே
ஆறேழு நண்பர்கள் கூடி ஆங்காங்கே
அலைந்ததென்ன வயக்காட்டில் ஓடியாடி
விளையாண்ட காலமது
விடியும்வரை கூத்துபார்த்து பாட்டி
மடியில் உறங்கியக் காலம் கேளா
கிடைத்த சுகம் இனி கிட்டுமோ
இங்கே அயல் நாட்டினிலே
கலியுகம் : அண்ணன் மனசு சே.குமார் அவர்களின் அழைப்பை ஏற்று தொடர் பதிவாக எங்கள் ஊரின் வாசம் ..... அடுத்ததாக நம்ம கவுண்டர் பன்னிக்குட்டி ராமசாமி அவர்களை அழைக்கிறேன் இப்பதிவை தொடர ....
11 கருத்துகள்:
யோவ் இதுல என்ன தீம், நான் என்ன எழுதனும்? வெளக்கமா சொல்லுய்யா...
கவுண்டரே உங்க சொந்த மண்ணைப்பற்றி எழுதுங்க ....
/////தினேஷ்குமார் said...
கவுண்டரே உங்க சொந்த மண்ணைப்பற்றி எழுதுங்க ....
///////
ரொம்பக் கஷ்டமாச்சே?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////தினேஷ்குமார் said...
கவுண்டரே உங்க சொந்த மண்ணைப்பற்றி எழுதுங்க ....
///////
ரொம்பக் கஷ்டமாச்சே?
கவுண்டரே இஷ்டப்பட்டு எழுதுங்கோ அம்சமா வரும் .......
ஓகே முயற்சி பண்றேன்!
Arumai... Kavithai vadivil... super. azhaippai etramaikku nanri.
இன்னும் எழுதியிருக்கலாமோ? ஆனா..எழுதியவரை நல்லாயிருக்கு பங்கு!
அருமையாக உங்கள் ஊரை பற்றி சொல்லி உள்ளீர்கள்
இன்று என் வலையில்
என்ன கன்றாவி இது ?
சொந்த ஊரப்பத்தி சொல்லனும்னாக்க எல்லோருக்கும் கரும்பாகத்தான் இனிக்கும்....நீ்ங்க அழகான கவிதையிலேயே சொல்லிவிட்டீங்க.
அருமையான வரிகள், நல்லா இருக்கு.
கருத்துரையிடுக