சனி, 21 மே, 2011

வாங்க விருந்துக்கு .....


படைத்தவன் அழைத்தான் பயணப்பட்டேன்
அவன் என் நாவினிலே பொய்யுரைத்து
விடுப்பளித்தான் விடைகொடுத்தான்
எந்தன் விடியளுக்கோ நானறியேன்.....

தாய் மண்மிதித்தேன் இன்ப ஆனந்தத்தில்
கரம் தொழுதேன் நம்மை படைத்தவனை
காட்சி தந்தான் எந்தன் இதயத்திலே
அகமகிழ்ந்தேன் இன்ப வெள்ளத்திலே.....

மெய்யுரைத்தான் எந்தன் நா உரைத்த
பொய் மெய்யென்று உந்தன் வரவை
எண்ணி நோன்பிருக்காள் சென்று
கரம்பிடிப்பாய் என ஆணையிட்டான்.....

புரியா புதிராக்கி புரியவைத்தான்
என்னவளை அறியவைத்தான்
எளிதாய் எங்கள் மணம்முடித்தான்
விரைவில் விடை கொடுத்தான்.........

கலியுகம் : அன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கங்களுடன் உங்கள் தினேஷ்குமார்......
நேர்லதான் விருந்து வைக்கமுடியல அதான் கல்யாண சாப்பாட்ட இங்கயே கொண்டுவந்துட்டேன் கோபிக்காதிங்க நண்பர்களே......

29 கருத்துகள்:

Ram சொன்னது…

வைக்கமுடியல அதான் கல்யாண சாப்பாட்ட இங்கயே கொண்டுவந்துட்டேன் கோபிக்காதிங்க நண்பர்களே......//

நண்பா நேர்ல வரமுடியல மன்னிக்கவும்.. வாழ்த்துக்கள்.. விருந்துக்கு நன்றி.. ஆனா ரொம்ப கம்மியா இருக்கு..

Ram சொன்னது…

சோறே வைக்காம இது என்ன விருந்து பிச்சிபுடுவன் பிச்சி..

Ram சொன்னது…

திங்கவே ஒண்ணுமில்லையாம் இதுல பக்கத்துல மினரல் வாட்டர் வேற..

Ram சொன்னது…

சரி பாசத்தோடு கொடுத்தீங்க.. ரொம்ப நன்றி.!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எப்பா சித்தன் சாப்பாடு விளம்பிட்டு இருக்கார் வாங்கய்யா சாப்பிட்டுட்டு போவோம்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கடவுள் பாட்டு நல்லாத்தேன் இருக்கு...

Unknown சொன்னது…

என்னய்யா புது மாப்ள!விருந்துன்னு சொல்லிபுட்டு வெறும் இலைய போடுற....பிச்சி புடுவேன் பிச்சி ஹிஹி!

Chitra சொன்னது…

முக்கியமான ஐட்டம்ஸ் மூணு நாலு குறையுதே.... ஹி, ஹி,ஹி,ஹி....

Chitra சொன்னது…

புது மாப்பிள்ளை, தினேஷ்க்கு வாழ்த்துக்கள்!
:-)

மோகன்ஜி சொன்னது…

மாப்பிள்ளை சார்! கவிதை விருந்து மட்டும் போதுமா எங்களுக்கு?

எல் கே சொன்னது…

நங்கை அவளை கரம் பிடித்த நீரும் ,
உன் தோள் சேர்ந்த
நங்கையும் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்

நிலாமதி சொன்னது…

வலையுலக நட்புகளையும் நினைத்தமைக்கு நன்றி . இன்னும் சில ஐட்டங்கள் குறைகிறதே. .
மாப்பிள்ளை க் கும் பொண்ணுக்கும் பதினாறு lவகை செல்ல்வங்களும் பெற்று வாழ் வாழ்த்துக்கள். .

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

வாழ்த்துகள் மச்சி!! சரி சரி.. இலை போட்டு இவ்வளவு நேரமாச்சி இன்னும் ரைஸ் வைக்கவில்லை. சீக்கிரம் சாதம் போட்டு சூடா சாம்பரா ஊத்த சொல்லு... :)

சிவகுமாரன் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே,
வாழை இலையில் அயிட்டம் கம்மியா இருக்கே ...தலைவா

GEETHA ACHAL சொன்னது…

வாழ்த்துகள்....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

வாழ்த்துக்கள்..

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

தினேஷ் நெடுநாள் இன்பமும் மகிழ்வும் செழிக்க இணையோடு வாழ்க.

என்னப்பா ஆள் உக்காராம சோத்தப் போட்டாக் காஞ்சு போயுடுமேங்கற அக்கறையை புரிஞ்சுக்கமாட்டிக்கிறீங்களே?

வந்து உக்காருங்க இலைக்கு முன்னால அப்பறம் பாருங்க தினேஷோட கவனிப்ப.

இல்ல தினேஷ்?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

புது மாப்ளை தினேஷ்க்கு வாழ்த்துக்கள்.. பொண்ணு மாப்ளையை நல்லா தான் தேத்தி இருக்காங்க போல.. கற்பனை விருந்து வெச்சு மிச்சம் பண்றாரே?

A.R.ராஜகோபாலன் சொன்னது…

ஆஹா, அற்புதமான கவி விருந்து
கவிஞன் விருந்து
வாழ்த்துக்கள் நண்பரே
நலமுடன் வாழ
வளமுடன் வளர
உளமார வாழ்த்துகிறேன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

நண்பா இனிய திருமண வாழ்த்துக்கள்! சாரி கொஞ்சம் லேட்டாகிடிச்சு!!

Speed Master சொன்னது…

புது மாப்ள சோறுஎங்கப்பா

Unknown சொன்னது…

உங்க ஏரியாக்கு புதுசு பாஸ்...இனிய திருமண வாழ்த்துக்கள்,
இனி தொடர்ந்து எனது தாக்குதல் இடம்பெறும் ஹிஹி

Rathnavel Natarajan சொன்னது…

மனப்பூர்வ திருமண வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

தினேஸ்...மனம் நிறைந்த திருமண வாழ்த்து.சாப்பாடு வயிறு நிறைஞ்சிட்டுது மனசும்தான் !

vanathy சொன்னது…

congrats, Bro. Where is the rice????

மனோ சாமிநாதன் சொன்னது…

அனைத்துச் சிறப்புக்களுடனும் இனிதே வாழ்வாங்கு வாழ மனங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!!

Ram சொன்னது…

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_8051.html

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ஒரு சப்பாத்தி எல்லாம் பத்தாதுங்க.. :))
வாழ்த்துக்கள்..!

மதுரை சரவணன் சொன்னது…

திருமண வாழ்த்துக்கள்... மிக்க மகிழ்ச்சி...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி