வியாழன், 17 மே, 2018

உண்ணுவதெல்லாம் உணவல்ல

“ அவர்களுக்கென்னத் தெரியும் நான் அமிர்தம் உண்ண ஆரம்பித்து விட்டேனென்று “

புதிதாக என்னுடல் என்னோட ஏதோ மகிழ்ச்சியைத் தெரிவிப்பதை உணர்ந்தேன் . பசிக்கும் நேரத்தில் மட்டும் தான் உண்ண வேண்டும் தாகம் எடுக்கும் போது மட்டும் தான் தண்ணீர் அருந்த வேண்டும் அதுவும் நாவிற்குச் சுவை உணர்த்தி மெதுவாக நீர்ப் போலவே தொண்டைக்குழிக்கு அப்பால் உணவுச் செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன் . இன்று வரை அதே முறையைக் கடைப்பிடிக்கிறேன் உணவு உண்ணும் பொழுது .


உணவு உண்ணும் முறை : 


ஆகாரத்திற்கு முன் தண்ணீர் அர்ந்தக் கூடாது அரை மணி நேரக் காலத்தைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் ( அரை மணி நேரத்துக்கு முன்னும் பின்னுமே தண்ணீர் அருந்த வேண்டும் ) . 
என்னடா இவன் சாப்பிடும் போது தண்ணீரே குடிக்கக் கூடாது என்கிறானே நடைமுறைக்கு ஆகுமா என்ற கேள்விக்கு விடை :


உணவை எப்படிச் சாப்பிடப் போகிறீர்கள், ஒரு கவலம் உணவெடுத்து வாயிலிட்டு நன்கு பற்களுக்கு வேலைக் கொடுத்து உதடுகளைப் பிரிக்காதுக் காற்றை உட்செலுத்தாமால் மென்று மென்று உமிழ்நீரோடு கூழாக்கி உண்ணப் போகிறீர்கள் அதாவது திரவ நிலையை உணவுப் பெற்ற பிறகே வயிற்றுக்குள் செல்லப் போகிறது . அப்படி உணவுத் திரவ நிலையில் வயிற்றுக்குச் செல்லும் போது தண்ணீர் அதனுடன் கலந்தால் உணவின் தன்மையும் மாறிவிடும் அதிலுண்டான சக்திகளும் சரிவரக் கிடைக்காமல் போகும் . அதுவும் இல்லாதுப் பசிக்கும் போது நமது வயிற்றில் சுரக்கும் அமிலமானது அதற்குத் தகுந்த அளவு உணவையே செரிமானத்திற்கு எடுத்துக் கொள்ளும் , அதனுடன் தண்ணீர்க் கலந்தால் செரிமானத்திற்கும் நாம் தொந்தரவுகளை உண்டாக்குகிறோம் .


உணவானது திரவ நிலைக்கு மாற்றப் பட்டே வயிற்றுக்குள் செல்வதால் செரிமான அமிலத்திற்கான வேலையை நாம் குறைக்கிறோம் . எளிதில் தொந்தரவுகள் இல்லாது உணவுச் செரிமானமடைந்து அதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தின் வழியாக உடலின் பாகங்களுக்குச் தேவையான சக்திகள் பிரித்து அனுப்பப் படுகின்றன உள்ளுறுப்புகளின் துணையோடு. அது மட்டும் இல்லாது முழுவதுமாகச் செரிமானம் ஆகிய முழு உணவின் சக்தியால் நம் இரத்தத்தில் உள்ள கோளாறுகள் நீங்க பெற்றுச் சுத்தமான இரத்தத்தை நமது உடல் பெறுகிறது.


சுத்தமான இரத்தம் : நம் உடலில் இவ்வாறு நாம் நாவிற்குச் சுவையை அறுசுவையும் கொடுத்து வாய் மூடிக் காற்றுப் புகாமல் தண்ணீர் குடிக்காமல் உண்ண ஆரம்பித்து விட்டால் இம்முறை உணவு உண்ணும் வழக்கத்தைத் தொடங்கித் தொடர்ந்த நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் முதல் சொட்டுச் சுத்தமான இரத்தம் சுரக்க ஆரம்பித்து விடுகிறது இரத்தச் சுரப்பியான எலும்பு மச்சையிலிருந்து. இப்படிச் சிறுகச் சிறுக இரத்தமான தனது பழைய செல்களைக் கெட்டச் செல்களை எரித்துப் புதிய சுத்தமான உடலுக்குத் தேவையான அளவு இரத்தத்தைத் தொடர்ச்சியான காலக்கட்டங்களில் நம் உடலே நமக்குத் தருகிறது இவ்வுணவு முறைக் கடைப் பிடிக்கப்பட்டால் .


அதென்னங்க அறுசுவை ? தினமும் நாங்கள் எங்குச் செல்வது அறுசுவை உணவுக்கு என்பவர்களுக்குத் தினமும் நாமருந்தும் தண்ணீரிலே அறுசுவையும் உள்ளது நெல்லிக்காய் , இளந்நிர் இவைகளில் அறுசுவையும் உள்ளது அதுவுமில்லாதுப் பல சுவைகளைக் கலந்துதான் நாம் உணவு சமைக்கிறோம் அதிலே அடங்கிவிடுறது அறுசுவையும் . அல்ல எனக்குத் தனித் தனியாகத்தான் அறுசுவையும் வேண்டும் என்பது வீன் வாதத்தை வளர்க்குமே தவிர நடைமுறைக்குச் சாத்திய படாது.


வெந்துதான் தணிந்ததெஙும் கூடு

வித்தகன் அணிந்தவுருச் சாம்பல்
பந்துதான் பணிந்துவிடும் என்றால்
பந்தமும் துறந்ததுந்த கூட்டைச்
சுந்தரம் சுகமருந்தாய்த் தோற்றம்
சுக்குதான் தவிமிருந்தோ தேற்ற
விந்தைகள் தயவறிந்தக் கூற்றால்
விஞ்சுதல் பதுமைகளாய்த் தோன்றும்

இரண்டாம் பகுதிக்கு : ஆகாரம் தேடி வாங்க ஆயுசு அதிகம் தேங்க 


கலியுகம் : என்னடா திரும்பப் புலம்ப ஆரம்பித்துவிட்டானே என்றப் புலம்பல் கேட்கிறது  இந்தக் கிறுக்கனுக்கு . முன்னமே கிறுக்கியதுதான் சிலப்பல உணர்த்தப் பட்டதாக உணர்ந்தேன் ஆதால் மேலுள்ள கிறுக்கலையும் இப்பதிவில் சேர்த்துள்ளேன் . தொடரும் கலியுகம் ...


நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி