திங்கள், 14 அக்டோபர், 2013

அதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும் .....!


அற்றதிரு என்னில் அடைக்கலம் ஆகிநிற்க்கும்
உற்றதிரு உன்னில் அடக்கிடல் ஆகுமாயின்
வெற்றுத் திருவுடலின் வற்றல் தகுமாயின்
தாகம் புகும் தரணியையார் ஆள்வது

பற்றதிரு தீமூட்டி மற்ற தறும்மகிழ
நெற்றிதிரு செங்கமழ் நீர்தொட்டு எனை
அற்றதிரு ஆடவனாய் விற்றடக்கி வீருகொள்
கொற்றவளே கோலமிடு கோர்வையாய்

கோவை கடந்தறிய கொய்யா சுவையறிய
பாவை படர்ந்தொளிர பாமரனாய் பவ்யமாய்
பார்கடலான் பார்வையுனை ஆட்கொள்ள ஆகும்
அதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும் .....

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... வாழ்த்துக்கள்...

மகேந்திரன் சொன்னது…

//பற்றதிரு தீமூட்டி மற்ற தறும்மகிழ
நெற்றிதிரு செங்கமழ் நீர்தொட்டு ///
சொற்கள் மயக்குகின்றன ..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//கோவை கடந்தறிய கொய்யா சுவையறிய
பாவை படர்ந்தொளிர பாமரனாய் பவ்யமாய்//

பவ்யமான பிரார்த்தனைகள் அழகோ அழகு.

பாராட்டுக்கள்.

Rupan com சொன்னது…

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி