ஞாயிறு, 20 நவம்பர், 2011

இனிக்கும் நாளென்று...?

அறியாதிருப்ப காரியக் குறையோ
தாயுண்டு தனயனுண்ண மீளுண்ட 
யான் விளைக்க பிழையறிவோர்
பெரியோர் வினை தொடுக்க

உள்ளமர்ந்து பிழையகற்றி அருள்வோனே
திகழுதம் மேனி இகழுதம் உலகே
மகிழுந்தமிழ் இன்னோர் நாவினில்
இனிக்கும் நாளென்று...?

புகுந்தோன் வளம்வர கிடந்தோன் 
மறந்தழ மாறுதென் மாடம் வாசம்
வீச வாசல் வந்தோனைத் தேடும்
பனியமர்ந்து நாடும் 

நல்லோனின் நலமறிய நரனாய்
நாவிரித்த வலையில் நகலும்
அகலும் அறிந்துழா ஆளுஞ்சுனை
நிறைந்திறக்க காணீர்.....

12 கருத்துகள்:

Madhavan Srinivasagopalan சொன்னது…

//"இனிக்கும் நாளென்று...?"//

தீபாவளி -- ஏனென்றால் 'தித்திக்கும் தீபாவளி' னு பாடுறாங்களே..

சத்ரியன் சொன்னது…

தினேஷ்,

இரண்டாம் பத்தியைத் தவிர்த்து மற்றதெல்லாம் சற்று கடினமாகவே இருக்கிறது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சத்ரியன் said...
தினேஷ்,

இரண்டாம் பத்தியைத் தவிர்த்து மற்றதெல்லாம் சற்று கடினமாகவே இருக்கிறது.//

நாங்களே மண்டை காஞ்சி கெடக்குறோம். இனி நீர் வேறயா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தம்பி, அண்ணன் வழக்கம் போல "ங்கே'தான்....

நாய் நக்ஸ் சொன்னது…

மனோ கமெண்ட் REPEAT

வெளங்காதவன்™ சொன்னது…

அண்ணே வழக்கம் போல தம்பி "ங்கே'தான்....
:)

வெளங்காதவன்™ சொன்னது…

முருகனைப் பற்றிப் பாடியுள்ள இந்தப் பாடல், கலுயுகக் கவிஞன் "தினேஷ்" அவர்களுக்கே சமர்ப்பிக்கப்படுகிறது!

#யோவ்.... சரிதானா?

SANKARALINGAM சொன்னது…

//மகிழுந்தமிழ் இன்னோர் நாவினில் இனிக்கும் நாளென்று...? //
இது மட்டும் கொஞ்சம் புரியுது.

பெயரில்லா சொன்னது…

பொறாமையாக உள்ளது..உங்கள் படைப்பை கண்டு...கஷ்டப்பட்டாவது தமிழ் கத்துக்கிறேன்...சகோதரர் மகேந்திரன் இடம் இதை அனுப்பியுள்ளேன்...எனக்கு மொழிபெயர்க்க...மன்னிக்கவும்...வாழ்த்துக்கள்...

விஸ்வநாத் சொன்னது…

தமிழ் பத்தி என்னோவோ
சொல்ல வரீங்கன்னு தெரியுது,
ஆனா ...

Unknown சொன்னது…

தம்பீ
தினேஷ்!
கவிதையில்
சொல்லாடல் நன்றாக
இருக்கு, ஆனால் பொருள் காண
படிப்பவர் மல்லாடும் படி இருக்கே
சற்று எளிமைப் படுத்துங்கள்!
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

மாலதி சொன்னது…

வாழ்த்துக்கள்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி