திங்கள், 5 ஜனவரி, 2015

இனியேனும் உன்னை விடுவேனா கண்ணா...!


இனியேனும் உன்னை விடுவேனா  கண்ணா
                காத்திருந்த கரு,வரையில் காலத்தை சாய்த்து
காட்சிதனில் ஆட்சிசெயும் சாட்சி கொண்டே
               கரம்பிடித்தேன் உன்னை கடவாதே நில்லு
நேற்றுவரை நிழலுடுத்தி நீந்திவர செய்தாய்
               காற்றுவந்து காதருகே காதலென சொல்லும்
சேற்றினிலே கோலமிட்ட செய்கையுன் வேலை
              ஆற்றுவ தெண்ணி அமிழ்வதேன் செல்லாய்

கருத்துயிரே காலக் கணையே பொருத்திரு
               கயவனாகி காப்பவன் காயமெனை வாட்ட
மருத்து வனேமாயம் செய்மாயும் மெய்மாற
               திருத்துவ போலெனை தீண்டாது செல்வாயோ
மூச்செழுத்து மொத்தம் தரஏற்க நிலவாய்
               யாருன்னை அழைத்தா ரெனிந்த விரைவோ
கொடுத்தவை போதாதோ மனிதம் செழிக்க
               வாய்க்குவாய் உன்னையே குற்றம் சாட்ட

திருந்துவார் யாரோ அறிந்துவர செய்யேன்
              அருந்துவார் தன்னை அகற்றுவ பொய்யில்
இருந்துபார் எண்ணம் தகர்த்துவ மெய்யை
              இடையேறுஞ் சக்தி பெற்றாலே பாக்யம்
இனுமேனோ என்னை தவிக்கவெ விட்டு
              இனங்காணும் முன்னே தரித்ததை விட்டு
இடங்காண அர்த்தம் அலங்கரிக்க விட்டு
              இனியேனும் உன்னை விடுவேனா கண்ணா,,,,,,


4 கருத்துகள்:

ரூபன் சொன்னது…

வணக்கம்
கற்பனையில் கவி எழுதினாய் கண்டு மகிழ்ந்தது உள்ளம்
அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

-'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை தினேஷ்...
வாழ்த்துக்கள்.

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

சிறப்பானதொரு கவிதை! வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு வரியும் இனிமை... பாராட்டுக்கள்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி