வெள்ளி, 17 ஏப்ரல், 2015

"கூற்றிலே கூத்தினைக் காண !"

1.சித்திரப் பூவினிற் தேனோ 
       சிந்தையி லூற்றெடும் தேனோ 
சத்திர யெந்திரம் தானோ 
       சந்தையில் விற்றுவந் தானோ 
சித்தனும் சத்திரம் தேட 
       சீதன மாகிடு வேனே
சித்திரக் கட்டடம் தங்க
      சிந்திடும் தூரிகை ஆவேன்

2.கூற்றிலே கூத்தினைக் காண 
      குந்திடுங் கூட்டமில் நானும் 
சேற்றிலே செம்மையைக் காண 
      சேர்ந்திடும் பொன்வயல் ஆடல் 
காற்றிலே கானலின் தூது 
      காலமும் மாறுதோ பாடம்
நேற்றவன் நெய்தது யாதும்
      நீர்த்ததன் வேர்த்துளி ஆகும்

3.கனவிலு மாறாக் கணமேன் 
      கதவுக ளாடா மனமேன் 
நினைவுக ளோடே சமரேன் 
      நிழலதுப் போகா வடுவேன் 
கனிவது தானே பழமாம் 
     கடவது காணாப் பதமேன்
மனமது மாயா மரமே
     மறையது மாறா மயமே

4.வாடி சதியே வழியின்
      வனம்என் மனமாய்ப் பதியும் 
நாடி நகரும் நதியாய் 
       நலனில் நழுகா திருக்க
பாடி விழையேன் பதிநான் 
       பழமைப் பதிவாய் அமர்வேன்
தேடும் கடலில் அலையாய்த்
      திரண்டேன் தினமும் உனதாய்

3 கருத்துகள்:

ரூபன் சொன்னது…

வணக்கம்

வரிகள் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... பாடம் காலமும் மாறிக் கொண்டே இருக்கிறது...

KILLERGEE Devakottai சொன்னது…


சிறப்பான வரிகள் நண்பரே...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி