வாரோமையா வாரோமே
வணக்கத்துடன் வாரோமே
வண்ணத்தமிழ் பாட்டெடுத்து
வர்ணித்து வாரோமே
கழனியிலே நெர்கதிரருத்து
கரும்புடைத்து வாரோமே
மண்வாசம் மனம் மணக்க
மண்தோண்டி அடுப்பமைத்து
குடும்பத்துடன் கூடி நின்று
குலவைபோட்டு குலவிளக்காய்
குடும்ப விளக்கு விளக்கேற்றி
கற்பூர ஆராதனையுடன்
மண்னடுப்பில் தீமூட்டி
மண்பானை துணைகொண்டு
கொத்துமஞ்சள் மாலை போட்டு
மஞ்சள் பூசி பொட்டுவைத்து
பசும்பாலும் நன்னீரும் பச்சரிசி
கலவைதனில் பொறுத்திருந்து
பொங்கிவரும் பசும்பாலுமங்கு
பொங்கலோ பொங்கலென்று ஆனந்த
குரல் பொங்க அனைவர் மனதிலும்
ஆனந்தம் கூடே பொங்கிட
பொங்கலோ பொங்கல் ஐயா
மஞ்சள் கைப்பிடி பிள்ளையாரே
ஆவாரம் பூ உண்டு
பூசணிக்காய் பொறியல் உண்டு
பேத்தியிலை தான் பறித்து
உனக்கொன்று தாய் பசுவுகொன்று
பொங்கல் பரிமாறி படையல் உண்டு
வாராயோ வாராயோ ஐயா
வாராயோ உலகாண்டு களைத்திருப்பாய்
பசித்தீர பொங்கல் புசித்து
களைப்பாரும்மையா
16 கருத்துகள்:
அருமையான வரவேற்பு பொங்கல் கவிதை தொகுப்பு
இனிய பொங்கல் மற்றும் உழவர்தின நல்வாழ்த்துக்கள் நண்பரே
பொங்கல் வாழ்த்துக்கள் சகோ..
தமிழர் திருநாளாம் உழவர்த்திருநாள் வாழ்த்துக்கள்
அவரு வந்துட்டாரா.??? நாளைக்கு வந்தா கண்டிப்பா சொல்லணும்.. அது சரி.. இதுல கிராமத்து வாசம் அடிக்குது.. மண் பானை பொங்கல் விட்டு நாள் நிறையா ஆச்சு.. பாடல் அருமை..
ஹா ஹா ஹா ஹா சூப்பர் மக்கா...
பொங்கலை கவிதைப்பானையில் படைத்துவிட்டீர்கள் நண்பரே... அருமை
பொங்கல் படைப்பு அருமை தல...
பொங்கல் வாழ்த்துக்கள்..
பொங்கல் வாழ்த்துக்கள்
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்
வந்தவர் பசியாற
வகையாய் பொங்கலுடன்
கவிதையும் படைத்தது
கண்ணுக்கு விருந்தாய்..
நன்றி.. உங்களுக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.. :)
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.:-)
பொங்கல் வாழ்த்துக்கள் பங்கு..
வந்தோம்.. வந்தோம்..
தமிழ் மணக்கும் தினேஷ் அவர்களின்
கவிதைப்பொங்கலை ரசிக்க
தோம்..தோம்.. என்ற இசையுடன்
வந்தோம்.. வந்தோம்..
கிராமியம் மணக்கும் கவிதை தந்ததற்கு நன்றிகள் தினேஷ்..
அருமையான கவிதை.
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக