திங்கள், 10 ஜனவரி, 2011

"அறக்குடில் அமைப்போம் வா"




பட்ட படிப்பு படிச்சதில்ல
பச்ச மிளகா காரம் குறைவதில்ல
பட்டு பட்டு படிச்சிருக்கேன்
பட்டம் தர யாருமில்லை.

பாறைகளும் உருகவைக்கும்
பாசக்கார பயபுள்ளை...
பாதியிலே வரும்முன்னே
பாதையிலே வண்ணம் வேண்டும்.

வஞ்சி உன்னை கைபிடிக்க
கொஞ்சி பேசி மணம்முடிக்க
பட்டம் ஒரு தடையாமோ..?
பரிசம் போட முடையாமோ..?

பச்சரிசி பொங்கி உண்ணும்
பட்டதாரி பக்குவமும் நானறிவேன்
பணம் எண்ணி மனம் விதைக்கும்
நாணம் இல்லா நகைப்புகூடே..!

நாளை வென்று காலம் கொன்று
கோர்வையிலா வாழ்க்கை படி
குடில் அமைக்க ஆசைப்பட்டு
தனியே நான் புலம்பவில்லை.

தரமான குடில் அமைக்க - அதனுள்
தனித்தே தான் வாழ்க்கை என்றால்
கவிதை வரிகளில் வாழ்வேனடி..!
காவியமாகும் என் வரிகளடி...!!

கலியுகம் : முந்தைய பதிவு "ஆன்ம குடில் "

16 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஐயா நீங்க புலவரா??

தமிழ்க்காதலன் சொன்னது…

உங்கள் காதல் கைக்கூட, ஆசை நிறைவேற என் ஆன்ம ஆசிகள் உங்களுக்கு. விரைவில் கைகூடும். பாசக்கார பயபுள்ளையா நீங்க.... உண்மைதான். அது எத்தனை பேருக்கு தெரியுது... பாசத்தை மூடி மறைக்கும் பணம்...
கொஞ்சகொஞ்சமாய் மனிதம் கொல்லும் குணம்... வாழ்க்கையை உண்மையாய் தேடும் வரிகளில்....
நனைந்து போகிறேன்.

ம.தி.சுதா சொன்னது…

வஞ்சியை நினைத்து எமை மிஞ்சி விட்டீர்களே..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

வினோ சொன்னது…

அனைத்தும் கை கூடும் :)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//வஞ்சி உன்னை கைபிடிக்க
கொஞ்சி பேசி மணம்முடிக்க
பட்டம் ஒரு தடையாமோ..?
பரிசம் போட முடையாமோ..? ////

அடடடா அருமை அருமை....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வர வர சங்ககாலத்துக்கே போறீங்க...

karthikkumar சொன்னது…

வெறும்பய said...
வர வர சங்ககாலத்துக்கே போறீங்க.//
அதானே :)

கிறுக்கன் சொன்னது…

கவிதை நயம் அருமை அதனினும்
அருமை தங்கள் காதல்.

-
கிறுக்கன்

Chitra சொன்னது…

உங்கள் கவிதைகள் நன்றாக மெருகேறி வருகின்றன. பாராட்டுக்கள்!

ருத்ரன் சொன்னது…

அருமையான கவிதை வரிகள், உண்மையிலே நான் ரசித்து படித்த கவிதைவரிகள், அருமையாக உள்ளது.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

கவிதை நயம் அருமை....

Kousalya Raj சொன்னது…

ஒரு ஏக்கம் , ஒரு பரிதவிப்பு எல்லாம் வெளிப்பட்டு இருக்கிறது கவிதையில்...! அழகிய நடை.

Philosophy Prabhakaran சொன்னது…

இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...

நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

ஆமினா சொன்னது…

வார்த்தைகள் அருமை

arasan சொன்னது…

அற்புதமான கவி வரிகள் ...

நல்லா இருக்குங்க ..

ஹேமா சொன்னது…

உங்கள் கவிதை வரிகள் வார்த்தைகள் எப்போதும் திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கிறது !

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி