வெள்ளி, 21 ஜனவரி, 2011

"ஆழியடக்கம்...!"


நிலை யில்லா நிகழ்விருக்க விழியுணரும்
நாழிகையும் விடியல் உந்தன் விழிவழிதனிலே
கலைத்திருக்க காலமில்லை பிழைத் திருக்கும்
பிறவிதனில் பிழைத் திருத்த பயணப்படு


அடங்கா அடக்கம் அடுக்கும் அளவின்றி
பசித்திருக்க புசித்திருக்க நிலை தளும்பும்
சரீர சாமர்த்தியம் உடன் தகிக்கும்
கனலடிக்கும் உனை மறைத்து மீண்டுவரும்


ஆழ்துழாது மெல்ல மேலெழும் அன்றே
விதை விழும் துளிர் விடாது
மீண்டுழும் மீள தொழுதுழும் தொடக்கம்
மறந்துழும் மணந்து வினை தரும்


வினைதொழும் விண்ணை மறந்தெழும் உன்னில்
எண்ணம் போற்றெழும் வண்ணம் மாற்றுதையே
சொற்க்கடங்கா நாச்சுவைக் கடங்கா பசுவிர்கடங்கா
சேர்ப்பிலடங்கி செல்லரிக்க புதைகுழிக்குள் அடக்கம்

10 கருத்துகள்:

Chitra சொன்னது…

வினைதொழும் விண்ணை மறந்தெழும் உன்னில்
எண்ணம் போற்றெழும் வண்ணம் மாற்றுதையே
சொற்க்கடங்கா நாச்சுவைக் கடங்கா பசுவிர்கடங்கா
சேர்ப்பிலடங்கி செல்லரிக்க புதைகுழிக்குள் அடக்கம்

......எதார்த்தம்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கொஞ்சம் புரிகிறது.. கொஞ்சம் புரியவில்லை...

logu.. சொன்னது…

arumai sago...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

nice

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தமிழ் விளையாடுது. ம் ம் கலக்குங்க

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

போன் பண்ணா உறக்கமாய்யா....
திருப்பி போன் பண்ணலாம்ல...
நானும் உங்க ஊர்லதானே இருக்கேன்...
[[ஹி ஹி பதிவு சூப்பர்]]

arasan சொன்னது…

புரிந்து கொள்ள முயலுகிறேன்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹா ஹா போன் பண்ணிட்டாருய்யா...
பார்ட்டி நம்ம பக்கத்துலதான் இருக்கார் ஹா ஹா ஹா...

சிவகுமாரன் சொன்னது…

கவிதை குழப்புகிறதா, இல்லை எனக்குத்தான் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லையா. தெரியவில்லை நண்பரே.

raji சொன்னது…

//பிழைத் திருக்கும்
பிறவிதனில் பிழைத் திருத்த பயணப்படு//

அற்புதமான கூற்று

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி