அறியா பருவம் ஒன்றில்
அரிதாரம் பூசிக்கொண்டு
நாவுரைத்த வசனங்கள்
என் பெயரை மாற்றியதுவே...!
முறுக்கும் மீசைதான் வரைந்து
அடக்க முடியா ஆக்ரோசத்துடன்
நா உரைத்த வீர வசனம்
நானாக நானில்லை நீயாக
மாறியதுவே உணர்வுகள்...!
'அட்டைவாள்' கத்திபிடித்து
'அகங்கொண்ட' வெள்ளையனை
வீராப்புடன் விரட்டியடிக்க
'வீரபாண்டிய கட்டபொம்மனாய்'
நான் மாறிய நொடிபோழுது
அரங்கேற்ற மேடைதனில்...!
உந்தன் சரித்திரம் பேசுதையா
உந்தன் சங்கதியாய் நானுமிங்கு
உன்போல் யாருமில்லை...!?
உடைவாளும் பகையாகுதையா..
பகைக்காமல் பகைக்குதையா
பணம்தானே வழிவகுக்குதையா..
வகையான புதை குழிதனிலே
எட்டப்பனாய் மாறிவரும்
சமுதாயமிங்கு புதைகுழியில்
பாதையமைத்து பயணிக்குதுதையா..
பாதை காட்ட யாருமில்லை
புதிய சமுதாயத்தின் வழிகளிலே
உந்தன் மறுபிறவி வேண்டுமையா..
மனதார வேண்டுகிறேன்.
விண்ணிறங்கி வாராயோ..
விடியல் காண வாராயோ..
முறுக்கு மீசை வீர பாண்டியரே...!
தமிழ் குளம் காக்க வாராயோ...?!
கலியுகம் : அஞ்சாசிங்கம் வீரத்தமிழர் "வீரபாண்டிய கட்டபொம்மன்" மண்ணில் உதித்த நாளின்று முறுக்கு மீசையாரை வணங்கி அவர் பாதம் சமர்பிக்கும் எனது வரிகள் .....
15 கருத்துகள்:
வீரபாண்டிய கட்டபொம்மன்" மண்ணில் உதித்த நாளின்று முறுக்கு மீசையாரை வணங்கி அவர் பாதம் சமர்பிக்கும் எனது வரிகள் ..//
வீர வணக்கங்கள்....
வீர வணக்கங்கள்....
வீரத்தமிழனுக்கு தலைவணங்குவோம்!
வீர பாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்...
கவிதை அருமை
வீரத் தமிழனுக்கு
ஆவேசமான வார்த்தைகளில்....
கவிதை சமர்ப்பணம்.....
நல்ல இருக்குங்க...!! :-)
//மனதார வேண்டுகிறேன்.
விண்ணிறங்கி வாராயோ..
விடியல் காண வாராயோ..
முறுக்கு மீசை வீர பாண்டியரே...!
தமிழ் குளம் காக்க வாராயோ...?!//
வீரத்தமிழன் வீரபாண்டியகட்ட பொம்மனுக்கு தலைவணங்குவோம்!
கவிதை அருமை
good rhyme
மனதார வேண்டுகிறேன்.
விண்ணிறங்கி வாராயோ..
விடியல் காண வாராயோ..
முறுக்கு மீசை வீர பாண்டியரே...!
தமிழ் குளம் காக்க வாராயோ...?!
அருமை..அருமை..! வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..!
வீரத்தமிழனுக்கு தலைவணங்குவோம்!
பகிர்வுக்கு நன்றி.
அருமையா இருக்குங்க ,...
பகிர்வுக்கு நன்றி
வீர வணக்கம்
Arumaiyaaga ezhuthi irukkireergal..nanru..!!
கருத்துரையிடுக