உறக்கம் வர மறுக்குத்தடி
உள்ளுக்குள் ஏதோ துடிக்குதடி
உள்மனசும் பேசுதடி
உணர்வலைகள் வீசுதடி
மனபேசி அழைக்குதடி
மனமெங்கோ பறக்குதடி
பாரினிலே எங்கிருந்தோ - உந்தன்
மனம் என்னை நினைக்குதடி
என்னை நெருங்கி வரும் காலமென்று
என்னென்னமோ சொல்லுதடி
மனபேசி அழைப்புதனை
ஏற்றுக்கொண்டேன் என்னவளே
வெகுவிரைவில் வழிபிறக்கும்
உனைக்காண வளம்வருவேன்
காந்தமான உன் ஈர்ப்பில்
உன்னை அறியாமல் தேடுகிறேன்
தைபிறக்கும் காலமிதோ
தடைகள் தகரும் காலமிதோ......
கலியுகம் : எச்சுச்மி யாரங்கே வாக்களிக்காமல் செல்வது நான் என்னத்தங்க கேக்குறேன் அரசியல் வாதியா இருந்தா ஓடிவந்து போடுவீங்க நான் நிக்கமாட்டேன் கண்டிப்பா பயபடாதிங்க... நம்பிக்கைதான் வாழ்க்கை நம்புங்க மக்கா
23 கருத்துகள்:
1st cut
where is the blog owner?
y r u using many d..?ha ha haa
good rhyme
தை பிறந்தால் வழி பிறக்கும் நண்பரே....
பாரினிலே எங்கிருந்தோ - உந்தன்
மனம் என்னை நினைக்குதடி
என்னை நெருங்கி வரும் காலமென்று
என்னென்னமோ சொல்லுதடி
மனபேசி அழைப்புதனை
ஏற்றுக்கொண்டேன் என்னவளே////////
superb...
ரொம்ப நல்லா யோசிக்கிறீங்க... :)
தைபிறக்கும் காலமிதோ
தடைகள் தகரும் காலமிதோ..//
அப்போ தை மாசம் விருந்தா...:)
உங்கள் தவிப்பு..ஏக்கம்..ஆசை எல்லாத்தையும் கவிதையில் வடிச்சுட்டிங்க...:))) நல்லா இருக்குங்க..
//வெகுவிரைவில் வழிபிறக்கும்
உனைக்காண வளம்வருவேன்
காந்தமான உன் ஈர்ப்பில்
உன்னை அறியாமல் தேடுகிறேன்
தைபிறக்கும் காலமிதோ
தடைகள் தகரும் காலமிதோ......
//
கண்டிப்பா வழி பிறக்கட்டும் அண்ணா .. ஹி ஹி
பங்கு! நடத்துங்க.ம்ம்ம்...வியாழன் நோக்கம் வந்துருச்சா?
உங்களின் நினைவலைகளில் வாழ்ந்து வரும் சீவனின் ஈர்ப்பில் உலகம் மறந்தீர்... உங்களின் கிளி உங்களை வந்து சேர வாழ்த்துக்கள். கிளி வரும் வரை கிலி தவிர்ப்பீர்....
உங்கள் தவிப்பு..ஏக்கம்..ஆசை எல்லாத்தையும் கவிதையில் வடிச்சுட்டிங்க.//
ஒரு மாசமா இவருக்கு இதுதாங்க வேலை ராத்திரி புரா தூங்காம கவிதை எழுதுறது காலையில நம்மகிட்ட புலம்புறது
1st cut//
என்ன குவார்ட்டர் கட்டிங்கா
தை பிறந்தால் வழி பிறக்கும் நண்பரே..//
அதனால் காலண்டரையே பார்த்துகிட்டு இருக்காராம்
வாக்களித்து விட்டோம், கருத்துரை நாளை மன்னிக்கவும்.
அசத்தல் தோழரே .. நல்ல சிந்தனை ...
வாழ்துக்கள்
//நமிப்பிக்கைதான் வாழ்க்கை நம்புங்க மக்கா//
என்னது நமிதாதான் வாழ்க்கையா? இதை நாங்க வேற நம்பணுமா??
கவிதை அருமை
உங்களின் kavi nadai arumai vaazhththukkal ippa paarunka இந்த neram paarththu தமிழ் karuvi வேலை seyyudhulai.
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்... கவிதை நன்று...
மனபேசின்னா என்ன டெலிபதியா? எத்தனை மனத்தோட மனபேசில பேசறீங்க? மனபேசி மனசை அதிகமா சிரமப் படுத்திடும் . அலை பேசியிலோ இல்லை மின் அஞ்சல்ல பேசலாமே ? உங்க மனபேசி முகவரி, சாரி, மின் அஞ்சல் முகவரி கிட்டுமா?
மனதோடு பேசும் மனபேசி...
அத்தனை உணர்வுகளும் கொட்டிக் கிடக்கு வரிகளில்.அழகா எழுதறீங்க தினேஸ் !
கருத்துரையிடுக