அரிது அரிது ஆடவனும்
சமைப்பதரிது அதனினும்அரிது
கோவைக்காய் பொறியல் அரிது
சேட்டன் கடையிலே கொட்டிகடக்கு
கோவைக்காய் அரை கிலோ
போதுமென்றார் என் நாவுக்கு
நானும் சமைக்கிறேன் பார்த்துக்க
நன்னீரில் குளிப்பாட்டி
தலைவெட்டி கால்வெட்டி
கோவைக்காயை நெடுகில் பிளந்து
வாள்வாளா நறுக்கிடனும்
அடுத்து வர்றாரு நம்ம
கோபக்காரருங்கோ
பச்சமிளகா பத்தெடுத்து
பக்குவமா குளிக்க வச்சு
குறுக்கால நறுக்கிடனும்
குறும் குறு துண்டா
பார்த்துக்க... சரி அடுத்து
வாணலிய சுத்தம் செய்து
அடுப்ப பற்ற வச்சு அதன்மேல
வாணல வச்சு தொட்டு பாக்கமா
வாணல் சுட்டுச்சான்னு பார்க்கணும்
சூடேறிய வாணலியில் சுத்தமான
எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு
தாளித்து குறு குறு பச்சமிளகாவா
போட்டு கொஞ்சநேரம் வதக்கிபுட்டு
நெடுக்கால நறுக்கிவச்ச
கோவைக்காயை போட்டு
சிறிது நேரம் வதக்கவும்
பிற்பால மேல்மூடி போட்டு
மிதமான தீதனிலே சிறிதுநேரம்
வேகவிட இடை இடையே
கிளறிவிட்டு சரியான பதம்பார்த்து
தேவைக்கேற்ற உப்பிட்டு கிளறி
மூன்று நிமிடம் வேகவைத்து
தேங்காய் பூ தூவி அடுப்பனைத்து
கீழிறக்க வாசமொன்று வீசுமங்கு
வெறும் சோற்றில் கைபிடித்து
உண்டு பாருங்க எந்தன்
சமையல் அருமை புரியுங்கோ .....
கலியுகம் : என்னங்க நான் சாப்ட போறேன் நீங்க ஓட்டு போட்டுட்டு பின்னூட்டம் போட்டுட்டு சமைத்து சாப்பிட்டு பாருங்க சுவையா இருக்கும்
27 கருத்துகள்:
அருமை அருமை சமையலிலும் தங்கள் கவி அருமை...
எனக்குத் தான் சுடு சோறு
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்
குழம்பு வைக்க தனி கவிதை வருமா?
Chitra said...
குழம்பு வைக்க தனி கவிதை வருமா?
அக்கா வாங்க குழம்பே தேவையில்லை வெறும் சாதத்தில் பிடித்து உண்டாலே சுவையா இருக்கும்
நம்ம வீட்டில் வேற சமையல் தல....
சமையல் கவிதை நல்லா இருக்கு...
நல்லா இருக்கு கவித வடிவில் சமையல் :-)
அப்பாடி....இவ்ளோ பச்சை மிளகாய் சேர்த்துக்கிட்டா வயிறு என்னாகும் தினேஸ் !
சமையலையும் கவிதையாக சொன்ன விதம் வியக்க வைக்கிறது...
சமைக்கத் தெரியும் போலிருக்கு உங்களுக்கு .
வாழ்க உங்கள் சமையல் அறிவு !
//சேட்டன் கடையிலே கொட்டிகடக்கு
கோவைக்காய் அரை கிலோ//
சேட்டன் என்றால் மலையாளிகளைத்தானே சொல்றியே ?அவன் எடை போட்டு தரமாட்டன் சகோ..கோவைக்காய் கொஞ்சம் பெருசா இருந்தால் அதுக்கு ஒரு விலை போட்டு தருவான்.
கவிதை அருமை.
பயபுள்ளக சொந்தமா சமைச்சு திங்கிறத எப்படியெல்லாம் சமாளிக்குதுக?!!
unable to vote thamilmanam at my office, latter will vote evening.
சாப்பாடு அருமை!!
கோவக்காய் சீசன் முடிஞ்சுடுச்சு இங்கே!!!
அடுத்த கவிதை சாப்பிடுவதைப்பற்றியா?
அரிது அரிது கவிப்புலமை அரிது...
அதனினும் அரிது பாகன் பதம் கவியில்
ஆகக்கூடி கோவைக்காய் சமைப்பதரிது
ஆனாலும் உங்கள் சொல்வளம் அரிது.
இன்பம் தரும் கண்கவர் காட்சியில்
எச்சில் ஊரும் காரம் ஏறும்
பக்குவமாய் கறி சமைத்தீர்...பின்
பகுத்துணர்ந்து கவி சமைத்தீர்
கோவைக்காய் கொய்யாக்காய் வெண்டை சுண்டை
பாவைக்காயும் பதம் கற்றுக்கொள் நண்பா
பாவம் என் தங்கச்சி... படிச்சவ.
பச்சமிளகா காரம் தாங்கமாட்ட பக்குவமா
பாசமுடன் நீ சமைச்சுப் போடு
பக்கத்திருந்து ஊட்டிவிடு... பொங்கலுக்கு
பரிசம்போட பாசமுடன் நானும் வாரேன்
பந்தியிலும் உன்கைச் சமையல் ருசிக்கட்டும்.
பசியுடன்.........
தமிழ்க்காதலன்.
தினேஷ் உங்கள் சமையல் கவிதையும் அதற்கு தமிழ்க் காதலனின் கவிதையும் அருமை... ஆமா கவிபாடி சமைப்பீரோ கவிஞரே..?
ஏற்கனவே சமையல பத்தி ஒரு கவிதை எழுதுனீங்க... இப்போ பொறியல பத்தி எழுதிருக்கீங்க... இனி சாப்பாடு எப்படிங்கறத பத்தி எழுதுவீங்களா... :) அருமை பங்கு...
காய்கறியெல்லாம் சமைச்சு சாப்பிடுறீங்க,இப்ப இருக்குற விலைவாசில...
ரொம்ப பணக்காரர்தான் நீங்க..
அருமையான சமையல் ஸாரி கவிதை, நல்ல முயற்சி, பட விளக்கம் இன்னமும் அருமை.
:))
அசத்தல்
Wow! super.
அட அட ... சமையல் பதிவும் கவிதையாக ... அட்டகாசம் ...
வீட்டுல வகை வகைய சமைச்சு வைச்சுட்டு, சாப்பிடக் கூப்பிட்ட கூட
போகாம, குட்டிச் சுவர்ல உக்காந்து நண்பர்களோடு அரட்டை அடித்த காலம் நினைவூறுகிறதா?
ம்.. இலுப்பம் பூ... ஸோ..சுவிட்.. சரிதானா தினேஷ் குமார்?
ஆஹா.. இப்படி தட்டில் சாப்பாடு போட்டு வச்சிக்கிட்டு.. போய் சமைச்சு சாப்பிடுங்க.. சொல்லிடீங்களே..
என்ன பண்றது... ?? ஹ்ம்ம்.. ஓகே.. நா வரேங்க.. :-))
இதான் கலியுகமா? சும்மா தாங்க.. கலாட்டா பண்றேன்.. :-)
நல்லா இருக்கு, படங்களும், கவிதையும்...!
//வெறும் சோற்றில் கைபிடித்து
உண்டு பாருங்க எந்தன்
சமையல் அருமை புரியுங்கோ //
உண்மை...! குழம்பு இல்லாம வெறும் சுடுசாதமும் இந்தப் பொரியலும் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் இருக்கும் சுவையே தனி... :))
எங்க அம்மா இந்த மாதிரி பீன்ஸ் பொரியல் செய்வாங்க.. அது நியாபகம் வந்திருச்சு :))
நீங்க சமையல்ல கலக்குவீங்க போல. இந்த மாதிரி சிம்பிள் சமையல் நாங்களும் கொஞ்சம் கத்துக்கிறோம். தொடர்ந்து கவிதையில் சமையுங்கள் :))
Oh my gosh added advantages! a tremendous document individual. Thank you But I’m suffering with problem with 3rd thererrrs r rss feed . Don’t realize how come Struggling to sign up for that. Maybe there is any person receiving comparable rss or atom limitation? Anybody who has found out i implore you to react. Thnkx
சமையல் அருமை ..!
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
http://blogintamil.blogspot.in/2013/07/2_31.html
கருத்துரையிடுக