ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

என் திருட்டு

என்னைப்பற்றிய சில வரிகளில் இது என் திருட்டு

என்னைப்பற்றி சிலவரிகள் 8

வாகனம் ஒரு இரண்டு மணிநேர பயணத்திற்கு பின் கண்விழித்தேன் இன்னும் நண்பர்கள் கண்கள் சோகத்துடனே காட்சியளிக்கப்பட்டடது நானே ஆரம்பித்தேன் சரி நடந்தது நடந்து விட்டது இனியாவது யோசித்து செயல்படுவோம் என்று நண்பர்களும் சரியென்றார்கள் நாளைக்காலை அனைவரும் மாவட்ட ஆட்சிதலைவரை சந்தித்து நடந்தவற்றை கூறுவோம் அவரிடமிருந்து என்ன ஆலோசனை வருகிறதோ அதன்படி செயல்படுவோம் என்றேன் சரியென்று எதிர்குரல் வந்தது பின் அனைவரும் வாகனத்தில் அவரவர் வீட்டுக்கு சென்றோம்.
மறுநாள் காலை நான் என் பெற்றோருடனும் மற்றும் சிலரும் அவரவர் பெற்றோருடனும் மாவட்ட ஆட்சிதலைவரை சந்திக்க அவரது அலுவலகத்தில் கூடினோம் பிற்பகல் 2:00மணிக்குத்தான் அனுமதி கிடைத்தது அனைவரும் சேர்ந்து சந்தித்து நடந்தவற்றை கூறினோம் அவரோ பள்ளிகூட தேர்வு என்றால் நான் முடிவெடுக்க முடியும் எனவே நீங்கள் அனைவரும் சென்னையில் உள்ள BOARD OF TECHNICAL EDUCATION-TAMILNADU அங்கு சென்று உயர் தலைவரை சந்தித்து தாமதிக்காமல் நடந்தவற்றை கூறுங்கள் நானும் முடிந்தவரை அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முர்ச்சிக்கிறேன் என்றார்.
மாலை ஒரு நான்கு மணியை தொட்டது சரி இனியும் தாமதிக்கவேண்டாம் நாளை அதிகாலை சரியாக 4:00 மணியளவில் இரண்டு வாகனங்கள் தயாராக முன்பு புறப்பட்ட இடத்திலிருந்தே புறப்படுவோம் ஒரு வாகனம் மாணவர்களுக்கு மற்றொன்று பெற்றோர்களுக்கு முடிவுவிடுக்கப்பட்டு அனைவரும் பிரிந்தோம். நானும் வீட்டுக்கு வந்தேன் இரவு ஒரு எட்டு மணி இருக்கும் என் மூளையில் ஒரு யோசனை தோன்றியது நாம் ஏன் கல்வித்துறை அமைச்சரை சந்திக்ககூடாது? என்று பெற்றோரிடம் கூறினேன் அவர்களும் சரியான யோசனை என்றுகூறினார்கள் பின் கல்வித்துறை அமைச்சரை தொலைபேசியில் இரவு பத்து மணிக்கு தொடர்பு கொண்டேன் மறுமுனையில் அவருடைய உடனதிகாரி தொலைபேசியில் உரையாடினார் நான் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவனாக கல்லூரியில் நடந்த அனைத்தையும் அரைமணிநேரத்தில் கூறிமுடித்தேன் பின் அவர் மாணவர்களாகிய எங்களை தாமதிக்காமல் நாளை காலை 8:30 மணிக்குள் சென்னை அடையாரில் உள்ள கல்வித்துறை அமைச்சரின் பங்களாவிற்கு வரச்சொன்னார்.
பின் நான் தொலைபேசியை துண்டித்துவிட்டு நண்பன் ஒருவனை தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு இன்று நள்ளிரவு 2:00மணிக்கு ஒரு வாகனமும் 4:00மணிக்கு மறுவாகனமும் புறப்படும் நீ மாணவர்களை 2:00மணிக்கு புறப்படும் வாகனத்திற்கு தயார்படுத்த பெற்றோர்கள் மற்றவாகனத்தில் வருவார்கள் கூறினேன் அலட்சியமான பதில்கள்
என் செவியை தாக்கின சரியாக மணி 11:20ஐ தொட்டிருந்தது வெளியே கிளம்பினேன் வண்டியை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மாணவன் வீடாகச் சென்று புறப்பாடு விஷயத்தை கூறிவிட்டு பெற்றோரை கொண்டுவர ஒருசில நண்பர்களையும் தயார்படுத்திவிட்டு வீட்டுக்கு செல்லும்போது மணி நள்ளிரவு 1:00 தொட்டிருந்தது வீட்டு வாசலில் வாகனமும் வந்து நின்றது வீட்டுக்குள் சென்று முகம்மட்டும் கழுவிவிட்டு புறப்பட தயாரானேன் என்னோடு என் பெற்றோரும் நன்கு பேசத்தெரிந்த என் உறவினர் ஒருவரும் என்னோடு புறப்பட்டனர் வாகனம் புறப்பட்டது வெகுசீக்கிரத்தில் மாணவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம்..........

நள்ளிரவு சூரியன்
உதித்ததோ.....
இருள் நீங்கி - எங்கள்
இடர் தீர்த்துவைக்க.........

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 7

ஏப்ரல்-15-2002
காலை ஏழுமணியளவில் பல்லாவரத்தை அடைந்தோம் அனைவரும் அங்கு ஒரு ஹோட்டலில் சிற்றுண்டியை முடித்தனர் என்னைத்தவிர பின்பு 8:30மணிக்கு புறப்பட தயாரானது வாகனம் சரியாக ஒன்பது மணியளவில் கிண்டியில் உள்ள அலுவலகத்தை அடைந்தோம் வாகனத்தை நிறுத்திவிட்டு நானும் மற்ற சில நண்பர்களும் சேர்ந்து அலுவலகத்திற்குச் சென்று உயர் தலைவரை பார்க்க அனுமதி கோரினோம் அவர் பத்து மணிக்குத்தான் அலுவலகம் வருவார்கள் பின்பு அச்சமயத்தில் வந்து பார்க்கவும் என்றனர் பின் அனைவரும் வாகனத்தில் வந்து அமர்ந்துக்கொண்டு அவர் வருகையை எதிர்கொண்டு காத்திருந்தோம் நான் சற்று அலுவலகம் பக்கமாக சுற்ற தொடங்கினேன் பக்கத்தில் ஒரு சிற்றுண்டி இருந்தது அங்குச்சென்று நானும் உணவருந்தினேன் பின் வாகனத்தின் அருகேச் சென்றேன் மாணவர்கள் ஒரே கூட்டமாக இருந்தனர்.
அங்கு சென்றேன் கல்லூரி முதல்வர் அங்கிருந்தார் அங்கு அவர் கூறியது நான் இப்பதான் உயர் தலைவரை கண்டுவிட்டு வருகிறேன் அவர் உங்களுக்கு உதவுவார் என்று தோணவில்லை என்றார் மாணவர்களுக்கு திக்கென்றது எனக்கில்லை (அவர் பெசிகொண்டிருக்கும் நேரம் சரியாக 9:45மணி) அவர் கூரியவார்தைகள் மேலும் வேருயேதாவது அரசியல் வாதிகளை வைத்து காய்னகர்த்தலாம் என்றார் சரி நீங்கள் எல்லோரும் ஏதாவது மனுகொண்டு வந்திருப்பீர்களே கொஞ்சம் தாருங்கள் படித்துவிட்டு தருகிறேன் என்றார் மதிகெட்ட மாணவர்களில் ஒருத்தர்கூட யோசிக்காமல் கல்லூரிக்கு எதிரானா மனுவை கல்லூரி முதல்வரிடமே காண்பித்தனர்......
அம்மனுவை படித்த முதல்வர் கடுங்கோபத்துடன் கல்லூரிக்கு எதிராக யாராவது செயல்பட்டால் அனைத்து தேர்வுகளும் நீங்கள் எந்த கல்லூரியில் வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் செயமுறைத்தேர்வு எமது கல்லூரியில் மட்டும் தான் எழுதமுடியும் எதிராக எவன் செயல்படுவா னாயினும் எத்துனைமுறை தேர்வு எழுதினாலும் வெற்றிபெற என்கல்லூரியில் வாய்ப்பே இல்லை என்றுகூறி அங்கிருந்து புறப்பட்டார் இதை கேட்ட அனைத்து மாணவர்களும் சற்று குழம்பிய நிலையிலே இருந்தனர் நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்கவில்லை நானோ நீங்கள் வந்தால் வாருங்கள் இல்லையேன் நான் சென்று அனைத்து மனுவையும் உயர் தலைவரிடம் கொடுத்து நடந்ததைகூறி நம் வாழ்க்கைக்கு வழி கேட்கிறேன் என்று கூறி அனைத்து மனுவையும் எடுத்துக்கொண்டு அலுவலகத்தை நோக்கி நடக்கலானேன் சற்றுதொலைவு சென்றிருப்பேன் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் யாரோ இருவர் என்னை தூக்கி வாகனத்தில் ஏற்றினர் வாகனம் படுவேகத்தில் புறப்பட்டது.

எனது நண்பர்கள்தான் கல்லூரி முதல்வர் சொன்ன வார்த்தைகள் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அதன் காரணமே என்னை வாகனத்தினுள் ஏற்றியது.........
நான் மிகவும் மௌணமானேன் வாகனம் சற்றும் வேகம் குறையாமல் சென்ருக்கொண்டிருன்தது ஒரே ஒரு வரத்தை கூறிவிட்டு உறங்கிப்போனேன் எனக்கு இரண்டாம் வகுப்பு கிடைத்தாலும் முதல்வகுப்பு கிடைத்தாலும் கவலை இல்லை என்னோடு நம்பிக்கை உள்ளது ஆனால் என் நண்பர்களாகிய உங்களை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது என்றேன். வாகனம் விடியற்காலை புறப்பட்ட இடம் நோக்கிவிரைந்துக் கொண்டிருந்தது......

நம்பிக்கை வென்றதோ
நயவஞ்சகம் கொன்றதோ
மனம் வெந்துபோனதோ
குணம் கொண்டுபோனதோ........

என்னைப்பற்றி சில வரிகள் 6

என்னை நோக்கி வராங்கன்னா யாராக இருக்கும். ஸாரி நண்பர்களே இதற்க்கு மேலும் சஸ்பென்ஸ் வைக்க கூடாதுன்னுதான் நினைத்த்தேன் முடியமாட்டேங்குது நண்பர்களே இன்றைக்கு முடிக்க நினைத்து முடிக்கமுடியவில்லை எனவே தொடர்கிறேன்........

ஆட்டோவிலிருந்து வந்தவர்கள் வேறுயாரும் இல்லை என்னை பெற்றவர்கள்தான் என்னிடம் நடந்த அனைத்தையும் நான் கூற கேட்டுவிட்டு அவர்கள் கல்லூரிவளாகத்தினுள் சென்றனர் என் தாய் தந்தை இருவரும் தீவிர கம்னிஸ்டு பக்கதர்கள் அவர்கள் உள்ளே செல்ல மாணவர்கள் கூட்டம் அவர்களை எதிர்நோக்கி வந்தது என்ன முடிவெடுத்தார்கள் என வினவினர் மாணவரிடம் நிர்வாகத்திற்கு பயந்த மாணவர்கள் மன்னிப்பு கடிதம் என்று கொஞ்சம் இழுத்தனர்.அவர்கள் மன்னிப்பு கடிதமா சரி மன்னிப்பு கடிதம் கொடுக்கிறீர்கள் அங்கு இருந்து வரும் பதில்கள் ஏறுக்கு மாறாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்றனர் மாணவர்களோ சற்று குழப்பத்தில் ஆழ்ந்தனர்...
எனது பெற்றோர்கள் அனைவரையும் இங்கே நில்லுங்கள் நாங்கள் சென்று நிர்வாகத்திடம் பேசிவருகிறோம் என்று நிர்வாகிகள் உள்ள கூட்ட அறைக்குள் சென்றனர் ஒரு 15நிமிடம் இருக்கும் கூட்ட அறையினுள் உள்ள நிர்வாகிகள் இவ்விருவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தினறி வெளியே வந்தனர். பின் சுமுகமான ஒரு முடிவு எடுக்கப்பட்டது இவர்களுடன் கூடி வரும் திங்கட்கிழமையன்று கல்லூரி நிர்வாக ஊழியர்கள் மூவர் சென்னைக்கு வருவார்கள் என்றும் மாணவர்கள் மன்னிப்பு கடிதம் எல்லாம் எழுதவேண்டாம் என்றும் மாணவர்களும் அவர்களுடன் சென்று நடந்த்தவற்றை அதிகாரிகளிடம் கூறவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன ஞாயிற்றுகிழைமை இரவு பக்கத்து ஊரில் உள்ள நண்பனின் வீட்டிற்கு அனைத்து மாணவர்களும் வந்துவிடவேண்டும் நான் விடியற்காலை 3:00 மணிக்கு வேண் கொண்டுவருகிறேன் என்று கூறி அனைவரும் விடைகொடுக்கமுடியாமல் பிரிந்தோம் நான் என்பெற்றோருடன்.........
மறுநாள் காலை சனிக்கிழைமை தினமலர் நாளிதழில் எங்கள் கல்லூரி மாணவன் ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்து பெற்றோர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர் என்றும் கல்லூரியில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் கல்லூரி மாணவன் பெயர் இடாமல் கொடுத்திருந்தனர் படித்த எனக்கு தூக்கிவாரிப்போட்டது. உடனே சற்றும் தாமதிக்காமல் கல்லூரிக்கு கிளம்பினேன் அங்கு சென்று நண்பர்களை பார்த்து நலம் விசாரித்துவிட்டு நானும் மற்றுமொரு சக நண்பனும் பக்கத்திலுள்ள வழ்க்கறினர் ஒருவரை பார்க்க சென்றோம். வழ்க்கறினரின் வீட்டுக்கு சென்றோம் அவரில்லை மாலைப்பொழுதுதான் வீட்டுக்கு வருவார் என்றனர்....
மாலை ஒரு ஆறு மணியளவில் வழ்க்கறினர் வந்தார் அவரிடம் நடந்தவற்றைக்கூறி நாளிதழை காட்டினோம் அவர் படித்துவிட்டு அவர் கூறியதாவது கல்லூரி ஊழியர்கள் உங்களுடன் வந்தாலும் கல்லுரிப்பக்கம்தான் பேசுவார்கள் எனவே அங்கு உங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்புகுறைவு என்று ஒரு மனு ஒன்றை எழுதிக்கொடுத்தார் கல்லூரி நிரவகத்துக்கு எதிராக இம்மாதிரி மனுவைப்போல ஒவ்வொரு மாணவனும் தனித்தனியே இச்செய்திதாளின் பிரசுரத்தையும் இணைத்து மனுவொன்று எழுதி சென்னையில் உள்ள BOARD OF TECHNICAL EDUCATION-TAMILNADU உயர் தலைவரிடம் கொடுத்து நீதி கேளுங்கள் என்றார் மணி இரவு 9:30ஐ தொட்டது அவரிடமிருந்து விடைபெற்று திரும்ப ஆயத்தமானோம்...
வரும் வழியில் டீகாடை சலூன் என்று ஏறிஇறங்கி நாளிதழை சேகரித்து கொண்டுசென்றோம் இருவரும்.....
ஞாயிற்றுகிழைமை இரவு பத்து மணிக்கு மணாவர்கள் அனைவரும் நண்பனின் வீட்டில் ஒன்ருகூடினோம் பின்பு வழக்கறினரின் ஆலோசனையை கலந்தைந்து அவரின் அறிவுரைப்படி மனுக்கள் தயாறாகிகொண்டிருந்தன நான் விடைபெற்று வேன் கொண்டுவர புறப்பட்டேன்....
திங்கட்கிழைமை விடியற்காலை மூன்று மணி வேன் சென்னை நோக்கி புறப்பட தயாறானது புறப்பட்டும் விட்டது மாணவர்களுடன் இருட்டை கிழித்துக்கொண்டு வாகனம் சென்ருக்கொண்டிருந்தது சென்னையை சென்றடைய நான்கு மணிநேரம் பிடிக்கும்...........

விடியாத இரவில்
விடைதேடும் பயணம்
இரவு விடியுமோ - எங்கள்
இடர் விடியுமோ........

புதன், 25 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 5

அடுத்த ஆறு மாத கால இடைவெளியில் தேர்வெழுதும்போது முதல்வகுப்பு தர முயற்ச்சிசெய்து முடிவெடுக்கிறோம்...... அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது என் கவனம் தேர்வுகால அட்டவணை பக்கம் சென்றது அவர்கள் எடுக்கும் முடிவில் நாட்டமில்லாமல் யார் செய்த தவறுக்கு யார் தண்டனை பெருவது, அட்டவணையை நோக்க அங்கிருந்து விலகி யாருக்கும் அறியாமல் நகர்ந்தேன் அங்கு செயமுறைத்தேர்வின் அட்டவணை அறிவிப்பு பலகையில் இருந்து கிழிக்கப்பட்டிருந்தது தடயங்களை அழிக்க நினைத்து கிழித்திருக்கிறார்கள் அவசரமாக அத்தேர்வின் பெயரும் தேதியையும் விட்டு
அங்கிருந்து விடுதிக்குள் ஓடினேன் நண்பன் ஒருவனின் புகைப்படக்கருவி கொண்டுவந்து அத்தடயத்தை புகைப்படம் எடுத்தேன். பின்பு யாருக்கும் அறியாததுப்போல நிர்வாக கூட்டம் நடக்குமிடத்திற்கு சென்றேன் அங்கு கல்லுரி முதல்வர் மாணவர்கள் கைப்பட எழுதிய மன்னிப்பு கடிதத்தை சென்னையில் உள்ள BOARD OF TECHNICAL EDUCATION-TAMILNADU அனைவரும் அங்கு சென்று உயர் தலைவரிடம் அவரிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டு நாங்கள் இனி இம்மாதிரியான தவறுகள் செய்யமாட்டோம் எங்களை மீண்டும் தேர்வெழுத சிபாரிசு செய்யுமாறு கேட்க்கச்சொனார்கள் வரும் ஏப்ரல்-15-2002 திங்கட்கிழைமையன்று...
எனக்கு விருப்பம் இல்லாமல் வெளியே சென்றேன் வெகுதொலைவில் ஒரு ஆட்டோ வருவது தெரிந்தது என்னை நெருங்கிவந்தது ஆட்டோவில் இருந்து இறங்கிய நபர்கள் என்னை நோக்கி வந்தனர்........

வந்தது யாரோ
வழித்தவறி வந்தவரோ
வழி நடத்த வந்தவரோ.....
யார் யார் யார் அது யாரோ...........

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 4

மன்னிக்கவும் நண்பர்களே தொழிற்பணி அதிகம் இரவுவேலை செல்வதால் குறைய தாமதம்
சரி கல்லூரிக்கு வருவோம்......

ஒருத்தரும் இல்லாத அறையில் மூச்சு காற்றா வரும் தென்றல் காற்றுதான் வரும்.
பறக்கும்படை தேர்வாலர்கட்கு பதில் சொல்ல இயலாத கல்லுரி நிர்வாகம் தட்டுத்தடுமாறி விடுதிக்குள் ஓடியது அங்கு இருந்த ஒன்பது மாணவர்களை அவரிருந்த நிலையிலே பலவந்தபடுத்தி தேர்வரைக்கு கொண்டுவந்தது கண்கள் கட்டப்பட்டது நிர்வாக காரியமும் முடிந்தது
கல்லூரிக்கு அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தேன் மாணவர் கூடியிருந்தனர் கல்லூரிக்கு வெளியே ஒவ்வொருவர் கண்ணிலும் சொல்லமுடியாத சோகம் அனைவரையும் அழைத்துகொண்டு கல்லுரிவலாகத்தினுள் நுழைந்தோம் நிர்வாகிகள் கூட்டு சேர்ந்து கூடியிருன்தனர் நடந்ததைக்கூறி நாயத்தை கேட்டோம் அங்கிருந்து வந்த வார்த்தைகளோ தேர்வு முடிந்து விட்டது இனி உங்களுக்கு இரண்டாம் வகுப்பு கிடைக்கும் அடுத்த ஆறுமாத இடைவெளியில் நீங்கள் தேர்வேழுதலாம் என்ற பதில்கள் மட்டும் கோவம் தலைக்கேறியது இது நம் வாழ்க்கை மட்டுமல்ல மற்றவறையும் நோக்க வேண்டுமென்று மனது கூறியது............
நிலை தடுமாறி வெளியே சென்றோம் அங்கு சில மாணவர்கள் சாலைமறியல் செய்ய முடிவுசெய்து அரங்கேற துவங்கியது. அனைவரையும் தடுத்தோம் நானும் விடுதி மாணவர்களும் சேர்ந்து. இச்செய்தி பக்கத்து கிராமத்திற்க்கு பரவி மக்கள் ஒன்று திரண்டு வந்தனர் எங்களையும் அழைத்துக்கொண்டு நிர்வாகத்திடம் சென்றோம் ஊர்மக்களுக்கு பயந்த கபட நாடக நிர்வாகம் மாணவர்களை தேர்வை தவற விட்டது தங்கள் தவறே என்று மன்னிப்பு கடிதம் எழுதிகொடுக்குமாரு ஒவ்வொருவர் கைப்பட அங்கனம் செய்தால் அடுத்த ஆறு மாத கால இடைவெளியில் தேர்வெழுதும்போது முதல்வகுப்பு தர முயற்ச்சிசெய்து முடிவெடுக்கிறோம்......

இடைவெளி நீடித்ததா
இடை இடையிடையே
இடர்வுகள் தகர்ந்தனவா..............

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 3

ஏப்ரல்-12-2002
சரியாக முற்பகல் 11:30 மணி தொலைபேசி அழைத்தது வீட்டில் தொலைபேசியை எடுத்தேன் மறுமுனையில் அழுகுரல் என் கல்லூரித் நண்பனின் குரல்தான் அது நான் சுதாரிடத்துக்கொண்டு அவனை என்ன என்ன விஷயம் சொல்லடா என்று பதட்டமான குரலில் கூறினேன் மறுமுனையில் நண்பன் நாளை நடக்கவிருந்த தேர்வு இன்று முடிந்துவிட்டது என்னச்செய்வது என்று புரியவில்லை என்றுகூறி மேலும் நண்பனின் அழுகுரல் மேலோங்கியது அவனை சாந்தப்படுத்தி கல்லுரிவலாகத்திலே இருக்குமாறு கூறி நான் என் பெற்றோரிடம் நடந்ததை கூறிவிட்டு வீட்டிலிருந்து கல்லூரிக்கு புறப்பட்டேன்.................

ஏப்ரல்-12-2002
காலை 10:00 கல்லுரிவளாகம் அனைத்துப் பிரிவினரும் தேர்வுஎழுதிக் கொண்டிருக்கிறார்கள் அந்நேரம் பறக்கும்படை கல்லுரிவளாகத்தினுள் நுழைந்தது எல்லா தேர்வு அறைகளையும் நோட்டமிட்டுக்கொண்டு வருகிறது இயந்திரவியல் துறையின் தேர்வு அறையை நோக்கும்போது ஒரு மயான அமைதி நிசப்த்தம் அறை முழுவதும் அமைதி நிலவி இருந்தது என்ன தேர்வு என்றாளே அமைதியாத்தான் அறை இருக்கும்னு சொல்ல்வரிங்கஅதானே.............
மூச்சுக்காற்று விடும் சப்தம் கூட இல்லீங்க.............
காற்று வந்ததா
கறை கடந்ததா
மூச்சு நின்றதா
மூழ்கிப் போனதா.............

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 2

ஏப்ரல் 12-20௦2
அன்று என்வாழ்வில் மறக்கமுடியாத சம்பவமொன்று அரங்கேறியது நான் தனியார் கல்லூரியொன்றில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பிரிவில் இறுதியாண்டு மாணவன் கல்லூரிக்கும் எனது சொந்த ஊருக்கும் 15kmtr தொலைவுதான் தினமும் பேருந்தில் வந்துப்போவது வழக்கம் அதேபோல் தேர்வு நேரங்களில் கல்லுரி விடுதியில் தங்கி படிப்பது வழக்கம் எல்லா செமஸ்டர் தேர்வுகளைப் போல் இறுதியாண்டு தேர்வும் ஒவ்வொன்றாக நல்விதமாக முடிந்தது ஒரு தேர்வுதவிர அத்தேர்வு எழுத்து செய்முறை தேர்வு (written practical) கல்லுரிவளாக கால அட்டவணைப்படி தேர்வுநாள் 13-ஏப்ரல்-2002 ஆனால் தேர்வாணையம் அறிவித்த கால அட்டவணைப்படி தேர்வுநாள் 12-ஏப்ரல்-2002.... மாணவர்களாகிய எங்களுக்கு காத்திருந்தது ஒரு சவுக்கடி 12ம் தேதி காலையில் விடுதியில் காலைவேலைகளை முடித்துவிட்டு மறுதினம் தேர்விருக்கிறது ஆதலால் நான் சக நான்பர்களிடம் கூறிவிட்டு காலை 9.00மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டேன் இரவு வந்துவிடுகிறேன் என்று
இரவு வந்ததா
நிலவு வந்ததா
பொழுது சாய்ந்ததா
பொய்கை விடிந்ததா.............
விடியும் விரைவாக..............

என்னைப்பற்றி சில வரிகள்

எவை பற்றியும் கவலைபடமாட்டேன் துணிச்சலாக எவரோடும் பேசுவேன் நியாயமிருந்தால்
யாருக்காகவும் அது அம்மாவிற்கு பயமாக மாறியது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவை பிரிந்ததே இல்லை. நான் ஊர் விவகாரங்களில் தலையிடுவது அம்மாவிற்கு பிடிக்கவில்லை வெளிஊர்ல வேலை தேடச்சொன்னார்கள் என்னடா நாம படிச்ச படிப்புக்கு உள்ளூரிலே வேலை தரமருக்குறாங்க இப்ப வெளிவுரிலா கம்பனி கமபனியா
தேடியலைந்து அலைகழிக்கப்பட்டு எட்டு வருடமாய் பல கம்பனிகள் எனக்கு கீழுள்ள வேலையாட்களாகட்டும் மேலதிகாரியாகட்டும் தப்புன்னா தட்டி கேட்டுருவேன் அதுக்கப்புறம் என்ன வேற கம்பனிதான் இந்த எட்டு வருசத்துல பதினைந்து கம்பனினா பார்த்துக்கோங்க.
இந்த எட்டு வருடமும் தனிமையே என் வழ்கையாச்சு தினமும் ஒருமுறையேனும் அம்மாவிற்கு போன் செய்து பேசினால்தான் தூக்கமே வரும் இப்படியே தனிமைலத்தான் என் வாழ்க்கையே ஓடிட்டிருக்கு இப்பவும். ஆனா என் வாழ்க்கைல நிறைய சுவாரஸ்யமான சூடான சம்பவங்கள் நடந்திருக்கு அச்சம்பவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாமா.............

விடை கொடுத்தல் விவரிப்பேன் என் சுயவிவரத்தை................

சனி, 21 ஆகஸ்ட், 2010

நாயகன்

நனைத்து துவைத்துப்பார் மனதை
நானும் நாளைய நாணய மனிதன் என்று
நினைத்து ரசித்துப்பார் வாழ்வை
நீயும் நாயகன்தான்
நுரைத்து குடித்துப்பார் மதுவை
நூற்றில் ஒருவனாவாய் நீ
நெஞ்சம் நிமிர்ந்து எதித்துப்பார்
நேர்மையுள்ள மனிதனாவாய்
நைந்து கேட்டுப்பார் இயலாது
நொறுக்கி யடித்துப்பார் அரசியலை
நோட்டம் எல்லாம் உன்மீதே...........

துணை

எவையும் எதிர்பாராமல்
எதிர்கொள்ளும் குணமுடையாளோ
விண்மீன்கள் வியத்திடும்
முத்துச்சிதறல் புன்னகை யுடையாளோ
கார்மேகம் கவர்ந்திடும்
கருங்கூந்த லுடையாளோ
முல்லைக்கொடி திகைத்திடும்
கொடியிடை யுடையாளோ
சூரியன் விழிக்கும்முன்
தான் விழித்து
மழைச்சாரல் குடைபிடிக்க
மல்லிகைச் சரம்தொடுத்து
மாலையிட வருவாளோ
இம்மன்னனின் துணையாக.............

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

கனா கண்டேன்

கனவொன்று கண்டேன்
நேற்று நள்ளிரவில்
உன் முகம் காண
ஆவலாய் விழிதனில்
வலைவீசினேன்
நின் தந்தையின்
முறுக்கு மீசை - மட்டும்
காட்சிக்கு இரையானது
ஏன் கனவிலும்
நின் முகம்கான
கடுந்தவம் மேற்கொள்ள
வேண்டுமோ நான்?
சொல்லடி என்
பச்சை பசுங்கிளியே............
நின் முகம்
காணும் நாட்களை
தினம் தினம்
வெறுமை கலந்த
தனிமையில்
நின் அன்பிற்காக
ஏங்கி அலைகழிகிறேன்
எனை அரவணைப்பாய்
என்று காலத்தை
கடந்து செல்கிறேன்
நின் வருகையை
நேர்கொண்டு..........

புதன், 18 ஆகஸ்ட், 2010

பட்டு புரிந்தவை

சட்டம் பயின்றவன்
சாஸ்தாங்கமாக
உறங்குகிறான்
சிக்கி தவித்தவன்
சீர்கெட்டு அழிகிறான்
சுற்றி திரிந்தவன்
சூழ்நிலை யறிவானோ
செத்து பிழைத்தவன்
சேர்வானோ யவனோடும்
சொந்தம் பிரிந்தாலும்
சோர்வின்றி வாழ்வில்லை
யவர்க்கும்...............

பசி

பாத்திரங்கள்
பசிதாங்காமல்
உருண்டு
மருண்டு சுருள்கின்றன
இன்னும்
பலர் வீட்டு
சமயலைறைகளில்..........

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

நண்பரின் வேண்டுகோள்

வணக்கம் நண்பர்களே
ஹரீஷ் அவருடைய அறிவுரைப்படி
மகாகவி பாரதியார் பாடல் ஒன்றை என்
சிந்தனைப்படி குறும் பாடலாக எழுதிவுள்ளேன்
தவறு இருந்தால் இம்மகா பாவியை மன்னித்தருள
வேண்டும்

கண்டதும் உனை நான் எழுதுகோல்லானேன்
கண்கள் லுதிர்திடும் காவியம் படைத்தேன்
காகித ஓடையில் கண்ணீர் வடித்து
வேள்விகள் தோற்துவரும் வினாவானேன்............

சுமைதாங்கி

ஆயிரம் இரவுகள்
அதிலோர் கனவு
கண்மணி நின்றால்
கார்மேக கூந்தல்
மயக்கும் மல்லிகை
மலர்ந்த முகம்
காந்த கண்கள்
கண்டிராத அழகு
அழைத்தது இளமை
வாழவைத்தது ஆண்கள்
வாழ்விழந்த நிலையில்
தினம் தினம்
இரவுகள் சுமக்கும்
இன்பம் பொங்கும்
இளமை விருந்து
பணமழை பொழியும்
பருவமது.........
பருவம் முதிரும்முன்
உயிர் குடிக்கும்
நோயொன்று.............
அவள் உடல் குடித்து
உயிர் குடித்தது...............

மலர்மாலை எதற்கு

மலர்மாலை கொடுத்த
ஆடவன் மறைந்தான்
அருகாமையில் உள்ள
ஆடவன் புதிது
அழைக்க துடிக்கும்
கண்கள்............
அணைக்க துடிக்கும்
இளமை............
அதனை ஏற்க்க
மறுத்த மனது
மல்லிகை தோட்டம்
மலர் கோடி கொடுக்க
மலர் தொடுத்த கரங்கள்
மலர் சூட மறுக்க
இந்த மங்கையின்
சடலத்தில்............
மலர்மாலை எதற்கு........

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

முயற்சி

மூன்று வரியென்று யோசிக்க வேண்டாம்
முயற்சிசெய்.............

உன் முடிவுவரை
முயற்சி செய்
என்னால் முடியும் என்று .............
நீரும் நெருப்பாகும்
முள்ளும் மலராகும்
உன் நெஞ்சின்
வலிமைகண்டு............

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி